டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை... மற்ற மாநிலங்களுக்கு ரூ.7,214.03 கோடி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

டெல்லி: இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 7,214.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் மட்ட குழு நடைபெற்றது. இதில், கஜா புயல் நிவாரணத்துக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

Rs.7,214.03 crore to States Affected by Natural Disasters Central Government Approves

ரூ.14, 910 கோடி கேட்கப்பட்ட நிலையில் தமிழகத்துக்கு ரூ.1,714 கோடி மட்டுமே ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக - சிவசேனா இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் வறட்சி நிவாரணப் பணிக்காக ரூ.4,714 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

அதே போல், வறட்சி நிவாரணமாக கர்நாடகத்துக்கு ரூ 949.47 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.900.40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இமாச்சலப்பிரதேசத்துக்கு ரூ. 317.44 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 191.73 கோடி ரூபாய்க்கும் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 127.60 கோடி குஜராத்திற்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 13.09 கோடி ரூபாயும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
A high-level committee chaired by Minister Rajnath Singh, approves Central assistance of Rs 7,214.03 crore to states affected by natural disasters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X