டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வேக்சின் சோதனை.. ரூ. 900 கோடி ஒதுக்கீடு.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வேக்சின் சோதனைக்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு மற்றும் மற்றும் லாக்டவுன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மாபெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியா இதன் காரணமாக முதல்முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் நுழைந்து உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து.கடந்த மூன்று மாதங்களாக திட்டமிடப்பட்டு நிதி பேக்கேஜ் அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது.

விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி.. பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்.. பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி.. பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்.. பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்

விவசாயம்

விவசாயம்

இதில் விவசாய துறை தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், விவசாய துறை மற்றும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க உரங்களுக்கு மானியம் கொடுக்க 65,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை விற்பனையை அதிகரிக்க சர்கிள் ரேட் மற்றும் பத்திர விலைக்கு மத்தியில் இருக்கும் விலை வரம்பை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரையில அதிகரிக்கப்படுகிறது.

மூலதன சந்தை

மூலதன சந்தை

மூலதன சந்தை மற்றும் தொழிற்துறையின் மேம்படுத்த 10,200 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்க DEAS திட்டத்தின் கீழ் 3000 கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த PM Garib Kalyan Rozgar Yojana திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யபட உள்ளது.

கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின் சோதனைக்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஆய்வு மற்றும் சோதனை பணிகளுக்காக இந்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். கொரோனா வேக்சின் சோதனை துரிதப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வேக்சின் ஆய்வு வேகம் எடுத்துள்ளது.

ஐசிஎம்ஆர்

ஐசிஎம்ஆர்

இந்தியாவில் ஐசிஎம்ஆர் மற்றம் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கோவாக்சின் மருந்தை கண்டுபிடித்துள்ளது. இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்றாம் கட்ட சோதனை தொடங்கியது. இந்த சோதனைக்கும் சேர்த்து மொத்தம் 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Rs 900 crore to be provided for research and development for Covid-19 vaccine says FM Nirmala Sitharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X