டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யெஸ் வங்கி பிரச்சனை.. தவறான நிர்வாகம்.. மோடி அரசுக்கு நேர் எதிராக ஆர்எஸ்எஸ் கருத்து

Google Oneindia Tamil News

டெல்லி: யெஸ் வங்கி பிரச்சனையில் நரேந்திர மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிராக ஆர்எஸ்எஸ் கருத்தை வெளிப்படுத்தி உள்ளது. யெஸ் வங்கி விவகாரத்திற்கு ரிசர்வ் வங்கியின் தவறான நிர்வாகமே காரணம் என்றும், ரிசர்வ் வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

Recommended Video

    அதிரடி..YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ

    வாராக்கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் யெஸ் வங்கி மூலதனத்திற்கு தேவையான நிதியை திரட்ட முடியாமல் கடும் நெருக்கடியில் சிக்கியது.

    இதனால் திவால் நிலைக்கு செல்லும் அளவுக்கு சென்றது. இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு நிர்வாகத்தை சீர் செய்து வருகிறது. மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

     யெஸ் வங்கியை போல் மேலும் சில வங்கிகள் திவாலாகுமா.. அச்சம் வேண்டாம்.. ரிசர்வ் வங்கி உறுதி யெஸ் வங்கியை போல் மேலும் சில வங்கிகள் திவாலாகுமா.. அச்சம் வேண்டாம்.. ரிசர்வ் வங்கி உறுதி

    ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி

    இந்நிலையில் பிரபல ஆங்கில இணைய ஊடகத்திடம் பேசிய சுதேசி ஜாக்ரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) தலைவர் அஸ்வினி மகாஜன், சரியான நேரத்தில் தலையிடாததால், யெஸ் வங்கியின் தோல்விக்கு சம்பந்தம் இல்லை என ரிசர்வ் வங்கி கைகளை கழுவ முடியாது. ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் முன்பே தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    கண்டுபிடிக்க முடியவில்லை

    கண்டுபிடிக்க முடியவில்லை

    தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வழிமுறைகள் இருப்பதால் , ரிசர்வ் வங்கி ஊமையாக ஒரு பார்வையாளராக நடந்து கொள்ள கூடாது. கடந்த சில ஆண்டுகளில் யெஸ் வங்கியின் கடன்கள் அளவு 30 சதவீதத்திற்கு மேல் உயர்ந்த போது ஏன் ரிசர்வ் வங்கியால் இந்த பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை?" இவ்வாறு கூறினார்.

    நிதி முறைகேடுகள்

    நிதி முறைகேடுகள்

    நிதி முறைகேடுகள் மற்றும் வங்கியின் செயல்பாடுகளில் தவறான நிர்வாகம் ஆகிய குற்றச்சாட்டுகள் யெஸ் வங்கி மீது வெடித்ததால், ரிசர்வ் வங்கியும், பிரதமர் மோடி அரசாங்கமும் யெஸ் வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்துக்களை ஆர்எஸ்எஸ் வெளிப்படுத்தி உள்ளது.

    ஒரே கருத்து

    ஒரே கருத்து

    முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பி. சிதம்பரம் மோடி அரசாங்கத்தை விமர்சித்து பேசுகையில் இது நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகத்திற்கு பொறுப்பாகும் என்று கூறியிருந்தார். கிட்டதட்ட சிதம்பரத்தின் கருத்தையே சுதேசி ஜாக்ரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) தலைவர் அஸ்வினி மகாஜனின் கருத்தும் பிரதிபலிக்கிறது.
    எனினும் யெஸ் வங்கி விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் செயல்பட்டது என்றும் 2017ம் ஆண்டே செயல்பாடுகளை கண்காணித்து நோட்டீஸ் அனுப்பியது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறினார்

    English summary
    A Rashtriya Swayamsevak Sangh (RSS) affiliate has held the Reserve Bank of India (RBI) responsible for the failure and mismanagement of Yes Bank
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X