டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கும்பல் படுகொலை மேற்கத்திய வார்த்தை.. வேறு மதத்தில் உள்ளது.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பிய தூர்தர்ஷன்-வீடியோ

    நாக்பூர்: கும்பல் படுகொலை (lynching) என்ற வார்த்தை மேற்கத்திய கட்டுமானம், இந்தியாவின் புகழை கெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக மத்திய அரசை பாராட்டி உள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற, தசரா, நிகழ்ச்சியில் பங்கேற்று மோகன் பகவத் பேசியதாவது: சில சமூக வன்முறைகளை, கும்பல் படுகொலை என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இதன் மூலமாக, நமது நாடு, இந்து கலாச்சாரம் ஆகியவற்றின் புகழை கெடுப்பதோடு, சமூகங்கள் நடுவே பயத்தை உண்டு செய்கிறார்கள்.

    RSS chief Mohan Bhagwat says the term lynching is Western Construct

    கும்பல் படுகொலை என்பது, இந்தியாவுக்கு தொடர்பற்றது. இந்த வார்த்தையே மேற்கத்திய கட்டுமானம். நமது பண்பாட்டில் இப்படி ஒரு வார்த்தைக்கே இடம் கிடையாது. வேறு ஒரு மதத்தின் கோட்பாட்டில் உள்ள வரிகளை நம் மீது சுமத்துகிறார்கள். இந்தியர்கள் மீது இதுபோன்ற வார்த்தைகளை இனிமேலும் யாரும் சுமத்த கூடாது.

    கொலைச் சம்பவங்கள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. இந்த நாட்டின் மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த கொள்கைக்காக, பங்களிக்க வேண்டும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சில பிற்போக்கு சிந்தனை கொண்ட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழக்கூடியவர்கள், அரசின் இந்த நடவடிக்கையை, எதிர்க்கிறார்கள். இந்தியா வலிமையான நாடாக மாறி விடக்கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். அவர்கள் தான் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்கள். இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.

    English summary
    RSS chief Mohan Bhagwat says the term 'lynching' was coined by Western people to tarnish India's reputation. Moreover, he has praised the cancellation of special status for Jammu and Kashmir. There are people at home and abroad who think that India should not become a strong country, said Mohan Bhagwat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X