டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்பப் பார்த்தாலும்.. மோடியும், அமித்ஷாவுமே வந்து உதவ முடியாது.. டெல்லி தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவுமே எல்லா நேரமும் உதவ முடியாது என ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாளேடான தி ஆர்கனைஸர் தெரிவித்துள்ளது.

பாஜக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. கடந்த முறை 3 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதேநேரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை வென்றுள்ளது. வாக்கு சதவீதத்திலும் ஆம் ஆத்மி கட்சி 53 சதவீதம் பெற்றுள்ளது.

பெண்ணை நாயுடன் ஒப்பிட்ட பாஜக செய்தித்தொடர்பாளர்.. பிரபல நடிகை கோபம்.. விளாசல்பெண்ணை நாயுடன் ஒப்பிட்ட பாஜக செய்தித்தொடர்பாளர்.. பிரபல நடிகை கோபம்.. விளாசல்

துரோகிகளை சுட்டுவிடு

துரோகிகளை சுட்டுவிடு

அண்மை காலங்களில் மிகவும் மோசமான தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டனர். "துரோகிகளை சுட்டுவிடு" போன்ற வெறுக்கத்தக்க முழக்கங்களை முழக்கமிட்டனர், கெஜ்ரிவாலை "பயங்கரவாதி" என்று அழைத்தனர், இந்த நிலையில் தான் டெல்லியில் லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாஜக, அடுத்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் கட்டுரை

ஆர்எஸ்எஸ் கட்டுரை

அண்மைக்காலமாக சட்டசபை தேர்தலிகளில் தொடர்ந்து தோற்றுவரும் பாஜகவுக்கு, டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் அதிகாரப்பூர்வ நாளேடான தி ஆர்கனைஸர் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்து ஆய்வு நடத்தி தலையங்க கட்டுரை வெளியிட்டுளளது.

பாஜக கட்டமைப்பு

பாஜக கட்டமைப்பு

அந்த கட்டுரையில், 2015 க்குப் பின்னர் பாஜகவின் கட்டமைப்பை அடிமட்ட அளவில் புத்துயிர் அளிப்பதில் பாஜக தோல்வி அடைந்தது மற்றும் தேர்தல்களின் கடைசி கட்டத்தில் பிரச்சாரத்தை சரியாக கட்டமைக்காமல் போனது போன்றவை டெல்லி தேர்தல் தோலவிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மோடி, அமித்ஷா

மோடி, அமித்ஷா

நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் சட்டபை அளவிலான தேர்தல்களில் எப்போதும் உதவ முடியாது, உள்ளூரூ மக்களின் நிவர்த்தி செய்வதற்காக டெல்லியில் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே டெல்லி தேர்தல் தோல்வி தரும் தெளிவான செய்தி. எனவே டெல்லி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

அங்கீகாரமற்ற குடியிருப்பு

அங்கீகாரமற்ற குடியிருப்பு

மேலும் அந்த கட்டுரையில், டெல்லியில் 1,700 அங்கீகாரமற்ற குடியிருப்புகளுக்கு அங்கீகாரம் அளித்து, 40 லட்சம் மக்கள் பயன் பெறும் பெறும்வகையில் பாஜக வாக்குறுதி அளித்ததும் பயனில்லை. காங்கிரஸின் பாரம்பர்ய நடுத்தர வர்க்க வாக்குகளைத் தவிர, இந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாக்குகள் பெரும்பாலும் ஆம் ஆத்மிக்குச் சென்றுள்ளது மக்களின் உள்ளூர் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக டெல்லியில் அடிப்படை அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை

ஷாஹீன் பாக்

ஷாஹீன் பாக்

கெஜ்ரிவாலுக்கு எதிராக நேரடியாக முதல்வர் வேட்பாளரை நிறுத்த தவறவிட்டது. பல மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க தலைவர்கள் பிரசாரம் செய்தும் கெஜ்ரிவால் வென்று இருக்கிறார். ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஆம் ஆத்மி நேரடியாக ஈடுபடாமல் திறமையாக கையாண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Prime Minister Narendra Modi and Home Minister Amit Shah cannot always help the BJP win assembly elections: RSS Analysis Of Delhi Polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X