டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ் ஷாகா மீது தாக்குதல்.. ஓட ஓட விரட்டிய நபர்கள்.. ராஜஸ்தானில் பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ் 'ஷாகா' மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புண்டி மாவட்டத்தில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஷாகா (முகாம்) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.

RSS shakha attacked in Rajasthan

இந்த சம்பவம் ஜூலை 10 ம் தேதி நடந்துள்ளது. ஒரு பூங்காவில் வைத்து ஆர்எஸ்எஸ் ஷாகா நடைபெற்றது. அங்கு திடீரென வந்த சில நபர்கள் ஷாகா நடத்த கூடாது என தகராறு செய்துள்ளனர். அப்போது, ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் வெடித்தது.

இதில், ஷாகாவில் பங்கேற்ற சில சிறுவர்கள், காயமடைந்துள்ளனர். தகவல் கிடைத்த உடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை சரி செய்ய முயன்றனர்.

"நாங்கள் இந்த பூங்காவில் ஷாகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். புதன்கிழமை மாலை, முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இதை எதிர்த்தனர், எங்களுக்காக கோஷமிட்டனர். நாங்கள் அவர்களை வெளியேறச் சொன்னபோது, ​​அவர்கள் எங்களை தாக்கத் தொடங்கினர் அவர்களில் சிலர் எங்கள் குழந்தைகளையும் அடித்தனர், "என்று ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா! பரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா!

"நாங்கள் போலீசில் புகார் அளித்துள்ளோம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்தனர். இருப்பினும், தாக்கியவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, விசாரணையில் நாங்கள் திருப்தியடையவில்லை" என்றும் அவர் கூறினார்.

"நாங்கள் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறோம். இது பெரிய பிரச்சினை இல்லை. ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்கும் சில முஸ்லிம்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும், நாங்கள் நிச்சயமாக அவர்களை கைது செய்வோம்," என்று போலீசார் தெரிவித்தனர்.

English summary
Rajasthan: Clash erupted between two groups during an ongoing session at Rashtriya Swayamsevak Sangh (RSS) shakha in Bundi district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X