டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபனி புயல் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள்.... வழக்கம் போல பழைய போட்டோக்களை வைரலாக்கிய ஆர்.எஸ்.எஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Fani: வழக்கம் போல பழைய போட்டோக்களை வைரலாக்கிய ஆர்.எஸ்.எஸ்- வீடியோ

    டெல்லி: ஃபனி புயலில் சிக்கி சின்னாபின்னமான ஒடிஷாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் முதன் முதலாக மீட்புப் பணிகளில் களமிறங்கியதாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் அனைத்துமே பழைய படங்கள் என்பது அம்பலமாகி உள்ளது.

    ஃபனிபுயல் ஒடிஷாவை தாக்கிக் கொண்டிருக்கும்போதே இதோ நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொன்டர்கள் என பெருமிதத்துடன் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஏராளமான படங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டன. இயற்கை பேரிடர் காலங்களில் இதுபோல ஒவ்வொரு முறையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெயரில் பழைய போட்டோக்களை வைரலாக்குவது வாடிக்கை.

    rss workers old photos going viral on social media

    இம்முறையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வைரலாக்கிய படங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தி குயிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியில், சமூக வலைதளங்களில் வைரலான படம் 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. விஸ்வ சம்வத் கேந்திரா என்ற தெலுங்கானா இணையதளத்தில் 2017-ம் ஆண்டி டிசம்பர் 2-ந் தேதி அந்த படம் பதிவிடப்பட்டுள்ளது.

    அதே படத்தை 2018-ம் ஆண்டு ஒடிஷாவை புயல் தாக்கிய போதும் இதோ நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என ட்விட்டரில் வைரலாக்கியுள்ளனர். அதாவது 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சில படங்களை வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு புயலின் போதும் ஆர்.எஸ்.எஸ். பெயரில் சமூக வலைதளங்களில் உலவ விட்டு வைரலாக்குகின்றனர் என்கிறது குயிண்ட் செய்திக் கட்டுரை.

    English summary
    Old Photos of RSS workers has gone viral in Social Media on releif works after Cyclone Fani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X