டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு டவுன்.. 70 ரூபாய் அளவுக்கு சரிய வாய்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, மேலும் குறைந்து, ரூ.70 என்ற அளவுக்கு சென்றுவிட்டது.

இன்று காலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69.76 என்ற நிலையில் இருந்தது. ஆனால் பிறகு அது 69.98 என்ற அளவுக்கு மேலும் பலவீனமடைந்தது. செவ்வாய்க்கிழமையான நேற்று மாலை வணிகம் நிறைவடையும் நேரத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69.63 என்ற அளவில் இருந்தது.

Rupee set to hit new low against US dollar

விரைவிலேயே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் என்ற அளவுக்கு சரிவடையக் கூடும் என்று தெரிவிக்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள். இந்திய ரூபாய் மட்டுமில்லை, டாலரின் மதிப்பு கூடியதால், ஆசியாவிலுள்ள பல்வேறு நாட்டு பண மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்பெருமையே பேசும் நீங்க.. மக்கள் பிரச்சனை பற்றி எப்போ பேசுவீங்க.. மோடிக்கு ப.சி கேள்விதற்பெருமையே பேசும் நீங்க.. மக்கள் பிரச்சனை பற்றி எப்போ பேசுவீங்க.. மோடிக்கு ப.சி கேள்வி

கச்சா எண்ணை விலை உயர்வு, இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. $75/பேரல் என்ற அளவை தாண்டி கச்சா எண்ணை விலை உயர்ந்தால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், அதிகரிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்பதால், ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையலாம் என்கிறார்கள்.

English summary
The Indian rupee (INR) weakened against the dollar today, moving closer to the 70/dollar level. At day’s low today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X