டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக்கில் சீனாவுடன் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், ரஷ்யா தனது 18 டன் ஸ்ப்ரட் எஸ்.டி.எம் 1 (Sprut SDM1 )இலகுரக டாங்கிகளை (பீரங்கி வண்டி) இந்தியாவுக்கு வழங்க முன் வந்துள்ளது. இதை இந்தியா கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    India- வுக்கு Russia கொடுக்க முன்வந்த நவீன டாங்கிகள்

    கடந்த ஒரு மாதமாக எல்லையில் படைகளை குவித்து அத்துமீறலில் சீன ஈடுபட்டு வருகிறது. லடாக் எல்லையில் ஜுன் மாதம் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பு உயிரிழப்பு குறித்த தகவலை வெளியிடவில்லை.

    இந்த மோதலுக்கு பின் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது எல்லையில் சீன ராணுவம் படை பலத்தை அதிகரித்து அச்சுறுத்த தொடங்கியது இதனால் பதிலடி கொடுக்க இந்தியாவும் படைகளை குவித்தது. சில இடங்களில் படைகள் விலக்கப்பட்டாலும் பாங்காங் திசோ, டெப்சாங் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

    ரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்ரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்

    இலகுரக டாங்கிகள்

    இலகுரக டாங்கிகள்

    இதற்கிடையில் பல வருட காலமாக இந்தியா இலகு ரக டாங்கிகளை உருவாக்க முயற்சி வரும் நிலையில் , சமீபத்தில் சீனாவுடனான எல்லை பிரச்சினை அதன் தேவையை உணர்த்தி உள்ளது. இதனால் இந்தியா ஆயுதங்களை வாங்க பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது.

    இலகுரக டாங்கிகள்

    இலகுரக டாங்கிகள்

    சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தையடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் ரஷ்யா சென்ற போது, ரஷ்யாவிடம் இந்திய ராணுவத்திற்காக வாங்க வேண்டிய ஆயுதங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜ்நாத் சிங்கிடம் அப்போது பட்டியலில் இல்லா இலகுரக டாங்கிகளை தர ரஷ்யா முன்வந்தது. இத்தனைக்கும் இந்தியா இந்த கோரிக்கைகளை ரஷ்யாவிடம் வைக்கவும் இல்லை. ஆனால் ரஷ்யாவே முன்வந்து சலுகையாக இலகுரக டாங்கிகளை இந்தியாவிற்கு வழங்க முன் வந்துள்ளது. எனவே இதை இந்தியா விரைவில் கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது.

    45 டன் டாங்கிகள் நிறுத்தம்

    45 டன் டாங்கிகள் நிறுத்தம்

    லடாக்கில் பதற்றம் காரணமாக 45 டன் எடையுள்ள டாங்கிகள் முன்னதாக அனுப்பப்பட்ட நிலையில் சுமார் 46 டன் எடையுள்ள கனரக டி -90 பீரங்கி வண்டியையும் இந்தியா நிறுத்தியுள்ளது. அத்துடன் டி -72 பீரங்கி வண்டியையும் நிறுத்தி உள்ளது. இந்நிலையில் இப்போது ரஷ்யாவின், 18 டன் ஸ்ப்ரட் எஸ்.டி.எம் 1 இலகுரக டாங்கியை வாங்கி இந்தியா நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    வேகமாக இயங்கும்

    வேகமாக இயங்கும்

    இதற்கிடையில், சீனா தனது புதிய இலகுரக டாங்கிகளை டைப் 15 ஐ 33 டன் எடையுடன் நிறுத்தியுள்ளது. இலகுரக டாங்கிகள். 40 டன்களுக்கு மேல் எடையுள்ள வழக்கமான போர் டாங்கிகளை காட்டிலும் மலைப்பகுதிகளில் வேகமாக இயங்குகின்றன. எனவே தான் ரஷ்யாவின், 18 டன் ஸ்ப்ரட் எஸ்.டி.எம் டாங்கிகள் வாங்க இந்தியா முன்வந்துள்ளதாம்.

    English summary
    Russia has offered India its 18-tonne Sprut SDM1 lightweight tanks for possible procurement amid the ongoing stand-off with China in eastern Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X