டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஷ்யா தயாரிப்பு கொரோனா தடுப்பு மருந்து ஸ்புட்னிக்-V நவம்பரில் இந்தியாவில் கிடைக்கும்?

Google Oneindia Tamil News

டெல்லி: ரஷ்யா தயாரித்து வரும் கொரோனாவுக்கான ஸ்புட்னிக் (Sputnik-V) தடுப்பு மருந்து வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் Fund தலைமை செயல் அதிகாரி கிரில் டிமித்ரிவ் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் படுதீவிரமாக உள்ளன.

இந்தியாவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு- 52 லட்சத்தை தாண்டியது! இந்தியாவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு- 52 லட்சத்தை தாண்டியது!

சீரம் நிறுவனம் ஆய்வு

சீரம் நிறுவனம் ஆய்வு

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருந்தை இந்தியாவின் சீர நிறுவனமும் பரிசோதித்து வருகிறது. ஆக்ஸ்போர்டின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் Sputnik-V

ரஷ்யாவின் Sputnik-V

இதேபோல் ரஷ்யாவின் Sputnik-V கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் டாக்டர் ரெட்டி லேபாரட்டரீஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவின் இந்த Sputnik-V 100 மில்லியன் டோஸ், இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மனித பரிசோதனைக்கு அனுமதி

மனித பரிசோதனைக்கு அனுமதி

இது தொடர்பாக டாக்டர் ரெட்டி லேபாரட்டரீஸ் நிர்வாக இயக்குநர் ஜிவி பிரசாத் கூறுகையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம்; ரஷ்யாதான் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் என கூறியுள்ளார்.

நவம்பரில் கொரோனா மருந்து

நவம்பரில் கொரோனா மருந்து

மேலும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் ரஷ்யா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமித்ரிவ் கூறுகையில், இந்தியாவில் நவம்பரில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும், கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

English summary
Russia's RDIF CEO Kirill Dmitriev said that Covid vaccine will be available in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X