டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா, சீனா மட்டுமல்ல.. 11 நாடுகள் வருகிறது.. ரஷ்யாவில் இன்று மாபெரும் அணிவகுப்பு.. புடின் பிளான்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரஷ்யாவில் நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

Recommended Video

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்.. India-க்கு Russia ஆதரவு

    இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்று இருக்கிறார். இந்திய சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்தியா ரஷ்யா இடையே கடந்த இரண்டு வருடங்களில் நிறைய ராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா போர் விமானங்கள், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை வாங்க உள்ளது.

    முக்கிய திருப்பம்.. இந்தியா-சீனா பிரச்சினையில் தலையிடப்போவதில்லை- ரஷ்யா அறிவிப்பு முக்கிய திருப்பம்.. இந்தியா-சீனா பிரச்சினையில் தலையிடப்போவதில்லை- ரஷ்யா அறிவிப்பு

    ஆலோசனை செய்தனர்

    ஆலோசனை செய்தனர்

    இது தொடர்பாக நேற்று ராஜ்நாத் சிங் ரஷ்யாவின் அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்தார். இந்தியாவிற்கு ரஷ்யா இந்த ஆயுதங்களை , விமானங்களை வேகமாக வழங்க வேண்டும். fastrack அடிப்படையில் இந்தியாவிற்கு ரஷ்யா ஆயுதங்களை வழங்க வேண்டும், என்று அவர் கோரிக்கை வைத்தார். இந்தியா - சீனாவின் மோதல் குறித்தும் இதில் பட்டும் படாமல் ஆலோசனை செய்யப்பட்டது.

    இன்று என்ன

    இன்று என்ன

    இந்த நிலையில் ரஷ்யாவில் நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியை ரஷ்யா வீழ்த்தியது. இந்த போர் நடந்து 75 வருடங்கள் முடிந்துவிட்டது. இதில் 20 மில்லியன் ரஷ்ய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களை நினைவு கூறும் விதமான அங்கு இன்று ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    மே 9ம் தேதி நடக்க வேண்டிய நிலையில், கொரோனா காரணமாக இந்த ராணுவ அணிவகுப்பு தள்ளிப்போய் உள்ளது. ஆனால் இப்படி நாள் தள்ளிபோனதை ரஷ்யா தனது சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதன்படி இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ரஷ்யாவின் அதிபர் புடின் 11 நாடுகளை அழைத்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு சீனாவும் வருகிறது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    உலக நாட்களை எல்லாம் ரஷ்யாவின் பக்கம் திருப்புவதற்காக புடின் இப்படி செய்கிறார் என்கிறார்கள். உலகின் வல்லரசு நாடுகள் இடையே புதிய இணைப்பை உருவாக்க, ரஷ்யா இதற்கு இடையில் பாலமாக இருக்க வைக்க இந்த திட்டத்தை புடின் தீட்டி இருக்கிறார். அதேபோல் இந்தியா - சீனா இடையே இதன் மூலம் பிரச்சனையை தீர்க்கலாம், இரண்டு ஆசிய நாடுகளை அமெரிக்காவிற்கு எதிராக திருப்பலாம் என்று புடின் நினைக்கிறார்.

    என்ன ஆசை

    என்ன ஆசை

    இன்னொரு பக்கம் ரஷ்யாவின் நிரந்தர அதிபராக மாற புடின் திட்டமிட்டு வருகிறது. அல்லது தனது பதவி காலத்தை மேலும் நீட்டிக்க அவர் யோசித்து வருகிறார். ஆனால் இதற்கு அந்நாட்டு அரசியல் கட்சிகள், எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவர்களை எல்லாம் வழிக்கு கொண்டு வர புடின் முடிவு செய்துள்ளார். இன்று நடக்கும் ராணுவ அணிவகுப்பு இதற்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார்.

    English summary
    Russia to hold massive military parade today: India, China, and 11 other countries participate on the remembrance of ww2.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X