டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து மத்திய அரசின் நிபுணர் குழு பரபர கருத்து.. மாநிலங்கள் தனியாக வாங்க தடை

Google Oneindia Tamil News

டெல்லி: புதன்கிழமை அன்று முதல் முறையாக சந்தித்த COVID-19 தடுப்பூசி நிர்வாகம் குறித்த மத்திய அரசின் நிபுணர் குழு, தனித்தனியாக தடுப்பூசிகளை வாங்க வேண்டாம் என்று மாநிலங்களைக் கேட்டுள்ளது, இதுபோன்ற கொள்முதல் அனைத்தும் மத்திய அரசு மூலம் நடைபெற வேண்டும் எனறு தெளிவுபடுத்தி உள்ளது,.

Recommended Video

    Russia Corona Vaccine| Why India may have to wait longer? | Sputnik V Vaccine | Oneindia Tamil

    சில மாநிலங்கள் ரஷ்யாவின் "ஸ்பூட்னிக் வி" தடுப்பூசியை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதால் நிபுணர் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. செவ்வாயன்று உலகின் முதல் தடுப்பூசியை தொற்று நோய்க்கு எதிராக ரஷ்யா பதிவுசெய்தது, அதன் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து மிகக் குறைந்த தகவல்களே உள்ளன. எனவே தான் மத்திய அரசு அதிரடியாக இந்த விஷயத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தற்போது உலகை அச்சுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தடுப்பூசி தான் ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமூக இடைவெளியோ, லாக்டவுனோ கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை. மாறாக தள்ளிப்போட மட்டுமே செய்கிறது.

    ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. பிரிட்டன் நிராகரிப்பு.. ஜெர்மனி எதிர்ப்பு.. நிதானம் காக்கும் இந்தியா! ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. பிரிட்டன் நிராகரிப்பு.. ஜெர்மனி எதிர்ப்பு.. நிதானம் காக்கும் இந்தியா!

     60 ஆயிரம் பேர்

    60 ஆயிரம் பேர்

    இந்தியாவில் உள்ள மத்திய மாநில அரசுகள் முடிந்த வரை மக்களை பாதுகாக்க அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுத்து வருகின்றன. ஆனால் தொற்று குறைவது போல் தெரியவில்லை. தினமும் 50 ஆயிரம் பேருக்கு தொற்று என்கிற அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. உயிரிழப்பும் தினமும் சுமார்1000த்தை நெருங்குகிறது.

    24லட்சம் பேர் பாதிப்பு

    24லட்சம் பேர் பாதிப்பு

    தற்போதைய நிலையில் இந்தியாவில் 23,99,992 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,7160 பேர் பலியாகி உள்ளனர். 16.97 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலையில் சுமார் 6.54 லட்சம் பேர் தொற்று பாதிப்புடன் இந்தியா முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாதிப்பும் அதிகமாகும்

    பாதிப்பும் அதிகமாகும்

    உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் (130 கோடி) தொற்று பாதிப்பு தற்போது 60 ஆயிரத்தை தினமும் கடக்க ஆரம்பித்து உள்ளதால், அமெரிக்கா மற்றும் பிரேசிலையும் மிஞ்சும் நிலை விரைவிலேயே ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே தொற்று பாதிப்பை தடுக்க தடுப்பூசியை வாங்க பல மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மத்திய அரசும் ஆர்வம் காட்டி வருகிறது.

    மாநிலங்கள் வாங்கக்கூடாது

    மாநிலங்கள் வாங்கக்கூடாது

    தற்போதைய நிலையில் ரஷ்யா மட்டுமே "ஸ்பூட்னிக் வி" என்ற பெயரில் செவ்வாய் அன்று தடுப்பூசி ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இதை வாங்குவது குறித்து பல மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மருந்தை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் என்றும் மாநில அரசுகள் தனியாக கோவிட் 19 தடுப்பூசிகளை வாங்க கூடாது என்று மத்திய அரசின் சுகாதார நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது.

    யதார்த்தம் இல்லை

    யதார்த்தம் இல்லை

    டாக்டர் வி கே பால், உறுப்பினர் (சுகாதார) நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆகியோரின் கீழ் கோவிட் 19 தடுப்பூசி குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "இந்தியாவுக்கு ஸ்பூட்னிக் வி வாங்குவது குறித்து எந்த கேள்வியும் இல்லை, ஏனெனில் இது 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை கூட முடிக்கவில்லை, மேலும் மனித சோதனைகள்.குறித்த ஆரம்ப விவரங்களையும் வெளியிடவில்லை கோவிட் -19 தடுப்பூசி பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் அதேநேரத்டிதல் அதில் ஓரளவு "யதார்த்தவாதம்" இருக்க வேண்டும்.

    இந்தியா கருத்து

    இந்தியா கருத்து

    உலக சுகாதார அமைப்பு கூட ரஷ்யாவின் மருந்து குறித்து சுட்டிக்காட்டுகிறது, எந்தவொரு தடுப்பூசியும் நாம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அளவுருக்களைக் கடப்பதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆகும் என்று நாங்கள் பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.

    தடுப்பூசி வழிகாட்டுதல்கள்

    தடுப்பூசி வழிகாட்டுதல்கள்

    முன்னதாக நிபுணர் குழு, நேற்று சரக்கு மேலாண்மை மற்றும் தடுப்பூசியின் விநியோக சங்கிலி தொடர்பான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு கருத்துருவாக்கம் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்தது. தடுப்பூசிக்கான கொள்முதல் வழிமுறைகள் தொடர்பான பிரச்சினைகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச உற்பத்தி மற்றும் தடுப்பூசிக்கு மக்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான வழிகாட்டுதல் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நிபுணர் குழு கோவிட் -19 தடுப்பூசி கொள்முதல் செய்வதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் மற்றும் அதற்கான நிதியுதவிக்கான பல்வேறு விருப்பங்கள் குறித்தும் நேற்று விவாதித்துள்ளது. தற்போது நிலவரப்படி மூன்று தடுப்பூசிகள் சோதனையில் உள்ளன, அவற்றில் இரண்டு உள்நாட்டிலேயே உள்ளன. இரண்டு தடுப்பூசியின் நிலையை அறிய நாடு முழுவதும் மனித சோதனைகள் நடந்து வருகிறது.

    English summary
    russia vaccine Sputnik V: An expert group on COVID-19 vaccine administration, which formally met for the first time on Wednesday, has asked states not to separately procure vaccines, clarifying that all such procurement will only be done centrally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X