டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன பாஸ்.. ஆர்பிஐயில் இருக்கீங்க.. இப்படியா பண்ணுவீங்க.. சர்ச்சையில் சிக்கிய எஸ். குருமூர்த்தி!

டிவிட்டரில் பொய்யான செய்தியை பகிர்ந்து ஆர்.பி.ஐ இயக்குனர்களில் ஒருவரான எஸ் குருமூர்த்தி பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டிவிட்டரில் பொய்யான செய்தியை பகிர்ந்து ஆர்.பி.ஐ இயக்குனர்களில் ஒருவரான எஸ் குருமூர்த்தி பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆர்பிஐ நிர்வாக இயக்குனர்களில் ஒருவருமான எஸ். குருமூர்த்தி இன்று காலை டிவிட் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். தி பாஸ்டன் இதழில் வெளியான பொய்யான செய்தி பற்றிய டிவிட் ஆகும் இது.

இதில், பாஸ்டன் விமான நிலையத்தில் முன்னாள் பிரதமரின் மகன் பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பகிர்ந்து யார் அந்த முன்னாள் பிரதமரின் மகன் என்று எஸ். குருமூர்த்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி

எல்லாம் பொய்

எல்லாம் பொய்

இந்த செய்தி ஃபிரி திங்கர் என்ற இணைய பக்கம் மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான செய்தியாகும். இந்த இணைய பக்கத்தில் விளையாட்டிற்காக நிறைய பொய் செய்திகள் உருவாக்கப்படும் . இந்த பக்கத்தில் பலர் பல விதமான செய்திகளை உருவாக்குவார்கள். நான் பிரதமர் ஆகிவிட்டேன், எனக்கு ஆஸ்கர் விருது கொடுத்து இருக்கிறார்கள் என்று நிறைய பொய்யான செய்திகளை உருவாக்குவார்கள்.

எஸ் குருமூர்த்தி ஷேர்

எஸ் குருமூர்த்தி ஷேர்

இப்படி உருவாக்கப்பட்ட ஒரு பொய்யான செய்தியைத்தான் தற்போது எஸ் குருமூர்த்தி ஷேர் செய்து இருக்கிறார். இவர் இப்படி ஷேர் செய்ததை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். என்ன பாஸ் உங்களுக்கு இந்த சின்ன விஷயம் கூட தெரியாதா, ஆர்பிஐல இருக்கீங்க? இப்படியா பண்ணுவீங்க என்று பலர் கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.

என்ன கிண்டல்

இதில் இன்னொரு நபர் இன்னும் ஒருபடி மேல் போய் ஆர்பிஐ இயக்குனர் குழுவில் இருக்கும் எஸ் குருமூர்த்தி பொய்யான செய்திகளை பரப்புகிறார் என்று செய்தியை உருவாக்கி அதை குருமூர்த்தியிடமே பகிர்ந்து இருக்கிறார். உங்களை பத்தியும் இதுல செய்தி வந்து இருக்கு பாருங்க என்பதை போல எஸ் குருமூர்த்தியை அவர் கிண்டல் செய்துள்ளார்.

டெலிட் செய்தார்

டெலிட் செய்தார்

இந்த நிலையில் தொடர் விமர்சனங்களை அடுத்து தற்போது எஸ் குருமூர்த்தி தனது டிவிட்டை டெலிட் செய்துவிட்டார். நான் வெளியிட்ட செய்தியில் சந்தேகம் இருப்பதாக சிலர் குறிப்பிட்டதால் அதை நீக்கிவிடுகிறேன் என்று எஸ் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

English summary
RBI director S Gurumoorthy faces a lot of backlash after sharing fake news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X