டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாமா? ராகுல் காந்தி புதிய நிலைப்பாடு!

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

கடந்த 2ம் தேதி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் 50 வயதிற்கும் குறைவான பெண்கள் ஆவர்.

Sabarimala temple Row: Rahul Gandhi takes a new stand in the issue

மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண்ணும் இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் சென்றுள்ளனர். இந்த சமயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சபரிமலைக்குள் பெண்கள் நுழைவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நான் கோவிலின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பதை மதிக்கிறேன். அதோடு பெண்களின் உரிமை போற்றப்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன். இரண்டு குரலுக்கும் நான் மரியாதை அளிக்கிறேன்.

நான் என் நிலைப்பாட்டை இதில் கொஞ்சம் மாற்றியுள்ளேன். கேரளாவில் உள்ள பெண்கள் அமைப்பினர், கேரளா பெண் காங்கிரஸ் கட்சியினரிடம் பேசிய பின்பே என் நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன் .

இதில் கேரள மாநில காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே தேசிய காங்கிரஸ் பின்பற்றும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

சபரிமலை தீர்ப்பு வந்த சமயத்தில் ராகுல் காந்தி சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய ஆதரவு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sabarimala temple Row: Congress chief Rahul Gandhi takes the new stand in the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X