டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சச்சின் பைலட் நட்டாவை சந்திக்க மாட்டார்.. பாஜகவில் இணையவும் மாட்டார்- அடித்து சொல்லும் உதவியாளர்

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பாஜகவில் இணைய போவதில்லை, அவர் எதிர்க்கட்சியை சந்திக்கவும் திட்டமிடவில்லை என அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சியால் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் கடந்த சனிக்கிழமை முதல் முகாமிட்டுள்ளார். அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேருடன் பாஜக தலைவர் நட்டாவை சந்திக்க போவதாகவும் அந்தக் கட்சியில் இணைய போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவும், காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை என்பது இப்போது புரிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாஜகவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

நாங்க பக்கா காங்கிரஸ்காரங்க.. யூ டர்ன் அடிக்கும் 3 சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்! நாங்க பக்கா காங்கிரஸ்காரங்க.. யூ டர்ன் அடிக்கும் 3 சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்!

முதல்வர்

முதல்வர்

இதனிடையே தங்களின் பலத்தை தெரிந்து கொள்ள முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சச்சின் பைலட்டின் உதவியாளர் கூறுகையில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில் விதிகளுக்கு மாறாக ஒரு முதல்வர் எப்படி விப் நோட்டீஸை கொடுத்தார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

அதுவும் முதல்வர் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற எப்படி அனுமதிக்கப்பட்டது? சச்சின் பைலட் பாஜகவில் இணைய போவதுமில்லை. அவர் பாஜகவினரை சந்திக்க போவதுமில்லை என்றார். திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் விப் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதில் கலந்து கொள்ளாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

 ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

டெல்லியில் இருக்கும் சச்சின் பைலட் இதுவரை சோனியாவையும் ராகுலையும் சந்திக்கவே இல்லை. இந்த நிலையில் சச்சின் பைலட் பாஜகவில் இணையாவிட்டால் எதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார் என்ற கேள்வி எழுகிறது. கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதலை தடுக்க காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் மூத்த தலைவர் அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் விரைந்துள்ளனர்.

யாருக்கு எவ்வளவு

யாருக்கு எவ்வளவு

200 பேர் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 101 பேர் தேவை. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். பாஜகவுக்கு 72 பேரும் ராஷ்ட்ரீய லோக் தன்திரிக் கட்சியின் 3 எம்எல்ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.

English summary
Rajasthan Deputy CM Sachin Pilot is not going to join in BJP, his close aide reveals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X