டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங். பெரிசுகளிடம் இருந்து எஸ்கேப்பாகவே ராகுல் ராஜினாமா? சச்சின், சிந்தியாவும் பதவி விலகல்?

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைவர் பதவி வேண்டாம் என திட்டவட்டமாக கூறும் ராகுல்- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கடுமையான நெருக்கடியில் இருந்து விடுபடவே கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் பிடிவாதம் காட்டலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

    காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்த போது ப.சிதம்பரம், அசோக் கெலாட், கமல்நாத் உள்ளிட்ட சீனியர்கள் தங்களது விருப்பத்துக்கு அவரை ஆட்டுவிப்பது பட்டவர்த்தனமாக அம்பலமானது. ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியதில் சச்சின் பைலட்டும் ஜோதிராதித்யே சிந்தியாவும் முக்கிய பங்கு வகித்தனர்.

    லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்!லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்!

    லோக்சபா தேர்தலில் படுதோல்வி

    லோக்சபா தேர்தலில் படுதோல்வி

    ஆனால் தங்களுக்குத்தான் முதல்வர் பதவி என அசோக் கெலாட்டும் கமல்நாத்தும் அடம்பிடித்து பதவி வாங்கிவிட்டனர். அப்படி அவர்கள் பதவியைப் பெற்ற போதும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு தலைகுனிவு தோல்வியையே தந்துள்ளனர்.

    சிதம்பரத்தின் ராஜினாமா மிரட்டல்

    சிதம்பரத்தின் ராஜினாமா மிரட்டல்

    இதேபோல் மகனுக்கு லோக்சபா சீட் தராமல் போனால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என ப.சிதம்பரம் மிரட்டியிருக்கிறார். எப்படியோ கார்த்தி சிதம்பரம் வென்றுவிட்டாலும் மூத்த தலைவர்களின் நெருக்கடியை ராகுல் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

    முதல்வர்கள் மாற்றம்

    முதல்வர்கள் மாற்றம்

    தாம் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் கட்சித் தலைவர் பதவி தமக்கு தேவை இல்லை என திட்டவட்டமாக ராகுல் கூறியிருக்கிறார். காங்கிரஸைப் பொறுத்தவரையில் அசோக் கெலாட், கமல்நாத் ஆகிய செயல்படாத முதல்வர்கள் மாற்றப்பட்டு சச்சின் பைலட், சிந்தியாவுக்கு வாய்ப்பு தரப்படலாம்.

    சச்சின், சிந்தியா ராஜினாமா?

    சச்சின், சிந்தியா ராஜினாமா?

    இதை அந்த தலைவர்கள் ஏற்காத நிலையில் ராகுல் பாணியில் இளைஞர்களும் கட்சி, ஆட்சி பதவிகளை ராஜினமா செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு கலகம் பிறந்தால் வழிபிறக்காதா என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

    English summary
    After Rahul gandhi Resign, party youth leaders Sachin Pilot and Sachin Pilot, Jyotiraditya Scindia also will quit from posts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X