டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்ல தகவல்.. ஆசியாவிலேயே இந்தியாவில் தான் அடுத்த வருஷம் சம்பள உயர்வு அதிகமாக இருக்குமாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆசியாவிலேயே இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் தான் 9.2 சதவீதம் அளவுக்கு அடுத்த வருடம் (2020) உயரக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

130-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோர்ன் ஃபெர்ரி நிறுவனம் ஊதிய உயர்வு தொடர்பாக ஆய்வு நடத்தியது. சுமார் 25,000 நிறுவனங்களில் 2 கோடிக்கும் அதிகமான ஊழியர்களிடம் தகவலை பெற்ற அந்த நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் எந்த நாடுகளில் எவ்வளவு சம்பளம் உயர்வு இருக்கும் என்பது குறித்து கணிப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் சம்பள உயர்வு

இந்தியாவில் சம்பள உயர்வு

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவின் சம்பள வளர்ச்சி விகிதம் என்பது இந்த ஆண்டு 10 சதவீதமாக இருந்த நிலையில் அடுத்த ஆண்டு 2020ம்ஆணடில் 9.2 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பணவீக்கத்தை(விலைவாசி உயர்வுக்குஏற்ப) சரிசெய்து ஒப்பிட்டு பார்த்தால் உண்மையான சம்பளம் என்பது 2020-ம் ஆண்டில் 5 சதவீதமாக மாற வாய்ப்பு உள்ளதாம்.

பணவீக்கம் அதிகரிப்பு

பணவீக்கம் அதிகரிப்பு

அதேநேரம் 2020-ம் ஆண்டில் உலகளவில் சம்பள உயர்வு என்பதே சுமார் 4.9 சதவீதம் என்ற அளவிலேயே இருக்குமாம். உலகளாவிய பணவீக்க கணிப்பு என்பத 2.8 சதவீதமாக உள்ளதாகவும், அதை சரிசெய்துவிட்டு பார்த்தால் உண்மையான சம்பள உயர்வு கணிப்பு 2.1 சதவீதமாக இருகும் என்று கூறப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இந்தியா

முதலிடத்தில் இந்தியா

ஆசியாவிலேயே இந்தியாவில் தன் சம்பள உயர்வு அதிக அளவு இருக்கும் என்றும் இந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல துறைகளில் எச்சரிக்கையான நம்பிக்கை உணர்வே இதற்கு காரணம் என்கிறார்கள்

மலேசியாவில்

மலேசியாவில்

இந்தியாவை தவிர மற்ற ஆசிய நாடுகளை ஒப்பிட்டு பார்த்தால் இந்தோனேசியாவின் சம்பள வளர்ச்சி 8.1 சதவீதமாகவும், மலேசியா, சீனா மற்றும் தென் கொரியாவில் முறையே 5 சதவீதம், 6 சதவீதம் மற்றும் 4.1 சதவீதம் சம்பள வளர்ச்சி இருக்கும் என கணித்துள்ளது கோர்ன் ஃபெர்ரி நிறுவனம்

குறைந்த அளவு

குறைந்த அளவு

மிக குறைந்த அளவாக ஜப்பான் மற்றும் தைவானில் முறையே 2 சதவீதம் மற்றும் 3.9 சதவீதமாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது.

English summary
Salaries in India likely to rise by 9.2% in 2020 The report added that India has emerged as the leader of salary growth projection in Asia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X