டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவிலேயே முதல் தடுப்பூசியை போட்டு கொண்டவர்... டெல்லி எய்ம்ஸ் துப்புரவு தொழிலாளி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் முதல் தடுப்பூசியை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை துப்புரவு தொழிலாளி மனிஷ்குமார் பெற்றுள்ளார்.

Recommended Video

    இந்தியாவில்... உலகின் பெரும் கொரோனா தடுப்பூசி இயக்கம்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் அவர் முதல் தடுப்பூசியை பெற்றார்.

    தடுப்பூசியைச் சுற்றியுள்ள அச்சங்களை அகற்ற விரும்பியதால், தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக மனிஷ்குமார் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

     "ஒருவேளை ஏதாவது பாதக விளைவு ஏற்பட்டால்.." கோவேக்சின் தடுப்பூசி போடும் முன்பு கேட்கப்படும் ஒப்புதல்!

    கொரோனா தடுப்பூசி வந்தாச்சு

    கொரோனா தடுப்பூசி வந்தாச்சு

    நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

    நாட்டின் முதல் நபர் யார்?

    நாட்டின் முதல் நபர் யார்?

    தலைநகர் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்த மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி மனிஷ்குமாருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.

    துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த பெருமை

    துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த பெருமை

    இந்தியாவில் முதல் தடுப்பூசியை பெற்ற முதல் நபர் என்ற பெருமை துப்புரவு தொழிலாளி மனிஷ்குமாருக்கு கிடைத்துள்ளது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நீண்ட காலமாக துப்புரவு தொழிலாளியாக இருந்து வருகிறார்.

    நன்றாக இருக்கிறேன்

    நன்றாக இருக்கிறேன்

    தடுப்பூசியை பெற்ற மனிஷ்குமார் கூறியதாவது:- நான் ஒரு பயனாளி என்று எனக்குத் தெரியும், தடுப்பூசியைச் சுற்றியுள்ள அச்சங்களை அகற்ற விரும்பியதால் என்னை தடுப்பூசி பெறும் முதல் பெறுநராக மாற்றும்படி எனது மேற்பார்வையாளரிடம் சொன்னேன். எனக்கு நிறைய அச்சங்கள் உள்ளன, ஆனால் நான் நன்றாக இருக்கிறேன்.

    குடும்பத்தினர் பயந்தனர்

    குடும்பத்தினர் பயந்தனர்

    பல ஆண்டுகளாக எய்ம்ஸில் பணியாற்றி வருகிறேன்.தடுப்பூசிக்கு பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. என் குடும்பமும் பயந்திருந்தது, ஆனால் நான் அவர்களிடம் அதை எடுத்துக்கொள்கிறேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறினேன் என்று மனிஷ்குமார் தெரித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவும் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Manish Kumar, a cleaner, is proud to be the first person in India to receive the first vaccine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X