டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் தடுப்பூசி யாருக்குனு தெரியனுமா... அப்போ இதை முதலில் படிங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

போடும் பணி தொடக்கம்

போடும் பணி தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

முதலில் யாருக்கு?

முதலில் யாருக்கு?

நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் பல மாநிலங்களில் யார், யாருக்கெல்லாம் முதலில் தடுப்பூசி போடப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

குஜராத்தில் மருத்துவ கண்காணிப்பாளர்கள்

குஜராத்தில் மருத்துவ கண்காணிப்பாளர்கள்

குஜராத் மாநிலம் அஹமதாபாத் மற்றும் காந்திநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருத்துவ கண்காணிப்பாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை முதலில் பெறுவார்கள். முதல் நாளில் 16,000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 100 பேருக்கு போடப்படுகிறது. ஆமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜே வி மோடி (46), காந்திநகர் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நியாதி லக்கானி (58) ஆகியோருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பெண் துப்புரவுத் தொழிலாளி

பெண் துப்புரவுத் தொழிலாளி

ராஜஸ்தானில் உள்ள சவாய் மன் சிங்(எஸ்எம்எஸ்) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுதிர் பண்டாரி முதல் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் 53 வயதான பெண் துப்புரவுத் தொழிலாளி துல்சா தாண்டி என்பவருக்கு முதல் தடுப்பூசி போடப்படுகிறது .

உத்தரபிரதேசத்தில் முதல் எம்.பி.

உத்தரபிரதேசத்தில் முதல் எம்.பி.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை எம்.பி.யுமான மகேஷ் சர்மாவுக்கு காலை 11 மணியளவில் கைலாஷ் மருத்துவமனையில் முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிது. மகேஷ் சர்மா பயிற்சி பெற்ற எம்பிபிஎஸ் மருத்துவர் ஆவார். இன்று தடுப்பூசி பெறும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மகேஷ் சர்மா என்பது குறிபிடத்தக்கது.

டெல்லியில் துப்புரவு பணியாளர்

டெல்லியில் துப்புரவு பணியாளர்

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் அரசு எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் துப்புரவு பணியாளர் 3 பேர் முதல் தடுப்பூசியை பெறுவார்கள். அசாமில் 12 முன்னணி மருத்துவர்களுக்கு சனிக்கிழமை காலை முதல் முதல் தடுப்பூசி வழங்கப்படும் என்று மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். ஸ்ரீமந்த சங்கர்தேவா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் உமேஷ் சந்திர சர்மா முதன்முதலில் தடுப்பூசி பெறுவார் என்று அவர் கூறினார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர்

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர்

பத்மஸ்ரீ விருது பெற்ற மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இலியாஸ் அலி, சாகித்ய அகாடமி விருது பெற்ற மற்றும் பார்பேட்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் துருபஜோதி போரா, ஜிஎம்சிஎச் முதல்வர் டாக்டர் அச்சியுத் பைஷ்யா மற்றும் அதன் கண்காணிப்பாளர் டாக்டர் அபிஜீத் சர்மா ஆகியோர் தடுப்பூசியை பெறுகிறார்கள்.கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ஜி.எம்.சி.எச்) துப்புரவுத் தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

English summary
Vaccination is being given to health, medical and frontline workers across the country in the first phase
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X