டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி மெட்ரோ ரயில் கதவில் சிக்கிய சேலை.. சக பயணியின் சமயோஜிதம்.. நூலிழையில் தப்பிய பெண்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலின் கதவில் சேலை சிக்கியதில் நடைமேடையில் தரதரவென இழுத்துசெல்லப்பட்ட பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ரயில் நிலையம் வந்ததும் மெட்ரோ ரயிலை விட்டு அந்த பெண் தனது மகளுடன் இறங்க முற்பட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விபத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Saree caught in the Delhi Metro Rail door: girl survived by virtue of a passenger

டெல்லி இந்தர்லோக் அருகேயுள்ள சாஸ்திரி நகர் பகுதியில் வசிப்பவர் 40 வயதான கீதா. இவர் தனது மகளுடன் நவாடா பகுதியில் இருந்து மோதி நகர் நோக்கி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் இந்த விபரீத சம்பவம் நடந்ததாக கீதாவின் கணவர் ஜக்திஷ் பிரசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், கீதாவும் தன் மகளும் நவாடாவிலிருந்து மெட்ரோ ரயிலில் பயணித்து வந்ததாகவும், அவர்கள் இருவரும் மோதி நகர் ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது, கீதாவின் புடவை வேகமாக மூடிய மெட்ரோ ரயில் கதவில் சிக்கியது. அப்போது ரயிலும் மிதமான வேகத்தில் நடை மேடையிலிருந்து புறப்பட்டது. இதன் விளைவாக சில மீட்டர் தூரத்திற்கு கீதா இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமும் சிராய்ப்பும் ஏற்பட்டது என்றார்.

பாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #NotreDameபாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #NotreDame

முன்னதாக ரயிலின் கதவு மூடும் போது சிக்கிய தனது சேலையை வெளியே எடுக்க கீதா முயற்சித்துள்ளார். ஆனால் அது பலன் தரவில்லை. சம்பவத்தை ரயிலின் உள்ளிருந்து பார்த்த பயணிகளில் ஒருவர், அவசரகால பட்டனை சமயத்தில் அழுத்தி ரயில் ஓட்டுனருக்கு எச்சரிக்கை தகவலை அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக சுதாரித்த ரயில் ஓட்டுனர், ரயிலை விரைந்து நிறுத்தியதால் கீதா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சிக்கியிருந்த ரயில் கதவிலிருந்து மீட்கப்பட்ட கீதா, சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் மோதி நகர் நிலையத்தில் நடந்ததை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த விபத்தால் மோதி நகர் ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்

English summary
Saree of a 40 year old woman caught in the Delhi Metro Rail door and she survived by virtue of a passenger and got head injury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X