டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. டுவிட்டரில் கலக்கும் #SareeTwitter

Google Oneindia Tamil News

டெல்லி: பெண்கள் புடவை கட்டிக் கொண்டு அதை புகைப்படமாக எடுத்து தற்போது அதை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

எத்தனை நவீன ஆடைகள் வந்தாலும் அடித்துக் கொள்ளவே முடியாத உடை என்றால் அது சேலையாகும். இந்த சேலையை இந்தியா முழுவதும் அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப புடவை கட்டுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்றைய தினம் டுவிட்டர்வாசி ஒருவர் தான் புடவைக் கட்டியதை நண்பர்களுக்கு பகிர்வதற்காக #SareeTwitter என்ற ஹேஷ்டேக்குடன் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். பின்னர் அவரது நண்பர்களும் அதை அப்படியே பகிர்வு செய்ததால் அது டுவிட்டரில் டிரென்டாகிவிட்டது.

உணர்கிறேன்

உணர்கிறேன்

இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து நக்மா, பா.ஜ.க நுபுர் ஷர்மா , பிரபல ஊடகவியலாளர் பர்கா தத் , எம்.பி யாகக் கலக்கும் காங்கிரஸ் கட்சியின் ரக்‌ஷ்மணி குமாரி என இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் புடவைக் கட்டிகொண்டு ஐ லவ் சரீ மற்றும் புடவைக் கட்டுவதை பெருமையாக உணர்கிறேன் என்று பதிவிட்டு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

புகைப்படம்

அது போல் ஆண்களும் தங்களது அம்மா, மனைவி, சகோதரி ஆகிய பெண்களின் புடவை கட்டியிருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்கின்றனர். அதிலும் அந்த ஹேஷ்டேக்குடன் ஷேர் செய்கின்றனர்.

இஸ்ரேல்

இன்று இஸ்ரேல்- இந்தியா உறவை பலப்படுத்துவதற்கான தூதரக டுவிட்டர் கணக்கில் ஒருவர் கூறுகையில் இன்று எனது கடைசி வேலை நாள். தூதரகத்தில் உள்ள நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ள அந்த பெண், புடவை கட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வங்க பெண்

பெங்கால் காட்டன் புடவை கட்டியிருக்கும் பெங்காலி பெண்.

புகைப்படங்கள்

புடவையில் வெளிநாட்டு பெண். என்னிடம் ஏராளமான புடவை கட்டிய புகைப்படங்கள் உள்ளன என கூறுகிறார்.

அழகு புடவை

இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் புடவை பறைசாற்றுகிறது. இதை அணிவோர் அழகாகவும், நளினமாகவும் மரியாதைக்குரியவராகவும் பார்க்கப்படுகிறார் என்று நக்மா தெரிவித்துள்ளார்.

English summary
#SareeTwitter trends now in twitter. Most of the ladies wear saree and took a photograph and shared in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X