டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மையா?... ஷாக் ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மையா?

    டெல்லி: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பகுதியில் எந்தவித சேதமும் இன்றி உள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதற்கு இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஆதாரங்களையும், எத்தனை தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்பதை தெரிவிக்குமாறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கேள்வி, இந்திய விமானப்படை மீது சந்தேகப்படுவதற்கு சமம் என்று பதிலளித்தார்.

    எப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ் எப் 16 விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது ஏன்.. பாக்.குக்கு யுஸ் நோட்டீஸ்

    படங்கள் வெளியீடு

    படங்கள் வெளியீடு

    இந்த நிலையில், சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் , செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு, அதில் பாலக்கோடு அருகே இஸ்லாமிய மத பயிற்சி பள்ளியான மதரஸா அமைந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் சொல்வது உண்மையா?

    பாலக்கோட்டில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால், இந்த செயற்கைக்கோள் படங்கள் அவரின் கூற்றை பொய்யாக்கி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    எந்தவித சேதமும் இல்லை

    எந்தவித சேதமும் இல்லை

    பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்றும் அங்கு உள்ள மதரஸாக்களிலும் எந்தவித சேதமும் அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மதரஸாக்களின் மொத்தம் ஆறு கட்டிடங்களும், நல்ல நிலையில் உள்ளன என்றும் மரங்களும் எதுவும் சேதமடையாமல் உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்தேகம்

    சந்தேகம்

    மதரஸா பள்ளியை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்தி வருகிறது என கூறப்படுகிறது, இந்த செயற்கைக்கோள் படம் இந்திய தொடர்பான சந்தேகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது .

    நம்பப் போவதில்லை

    நம்பப் போவதில்லை

    இதற்கிடையே , இந்திய விமானப்படை தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலங்களை கண்முன்னே காட்டாத வரையில் விமானப்படை தாக்குதலை நம்பப் போவதில்லை என புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவரான ராம் வக்கீல் என்பவரின் 80 வயது தாயார் கூறியுள்ளார்.

    English summary
    Shock Report : Is it true that the Indian Air Force had attacked
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X