டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்மை பாதுகாக்க வேண்டியவர்களே இப்படி செய்யலாமா?.. சாத்தான்குளம் மரணம் பற்றி ராகுல் காந்தி டிவிட்!

Google Oneindia Tamil News

டெல்லி: நம் பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது ஒரு பெரும் சோகம் என்று சாத்தான்குளம் சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

கோவில்பட்டி சிறையில் போலீஸ் கஸ்டடியில் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சாத்தான்குளம் மரணம் அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும் - வைரமுத்துசாத்தான்குளம் மரணம் அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும் - வைரமுத்து

கோவில்பட்டி சிறையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அவர்கள் சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி உள்ளது.

இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் இருவருக்கும் நீதி வேண்டி டிவிட்டரில் #JusticeForJeyarajAndFenix என்ற டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலரும் டிவிட் செய்து வருகிறார்கள். முக்கியமாக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் கூட டிவிட் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். அதில், போலீஸ் மிருகத்தனத்தோடு செயல்படுவது ஒரு கொடூரமான குற்றம். நம் பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது ஒரு பெரும் சோகம்.

Sathankulam Death: Rahul Gandhi voice against the brutal incident

Recommended Video

    சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு.

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அதோடு, ஜெயராஜ் & ஃபெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க அரசாங்கத்திடன் கோருகிறேன், என்று ராகுல் காந்தி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Sathankulam Death: Congress MP Rahul Gandhi voice against the brutal incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X