டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவில் ஓரங்கட்டப்பட்ட சத்ருஹன் சின்ஹா.. காங்கிரஸில் இணைகிறார்

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவில் ஓரங்கட்டப்பட்ட சத்ருஹன் சின்ஹா அதிலிருந்து விலகி காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பீகார் மாநிலத்தின் பாட்னா சாஹிப் தொகுதி எம்பியாக பாஜக சார்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் சத்ருஹன் சின்ஹா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் எம்பி தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் சத்ருஹன் சின்ஹா தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற பாட்னா சாஹிப் தொகுதி ரவிசங்கர் பிரசாத்திற்கு ஒதுக்கப்பட்டது.

இதைக் கேளுங்க.. ஜெ. பேச்சைக் காட்டி அதிமுகவினரை வறுத்தெடுத்த நாராயணசாமிஇதைக் கேளுங்க.. ஜெ. பேச்சைக் காட்டி அதிமுகவினரை வறுத்தெடுத்த நாராயணசாமி

பாஜகவுக்கு அதிர்ச்சி

பாஜகவுக்கு அதிர்ச்சி

இதையடுத்து வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் சத்ருஹன் சின்ஹா இணையலாம் என தெரிகிறது. பாஜகவில் அதிருப்தி எம்பியாகவே தொடர்ந்து வந்த நிலையில் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். இது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.

விவகாரம்

விவகாரம்

இந்த கூட்டத்தில் சத்ருஹன் சின்ஹா பேசுகையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர். ரஃபேல் ஊழல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அதை மறக்கடிக்க பாஜக தலைவர்கள் ராமர் கோயில் விவகாரத்தை பேசி வருகின்றனர்.

நீக்கம்

நீக்கம்

இதில் ரபேல் ஒப்பந்தத்தை அம்பானிக்கு மோடி கொடுத்ததையும் கேள்வி எழுப்பினார். இதனால் அவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மம்தாதான் சரி

மம்தாதான் சரி

இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சத்ருஹன் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடி ஒரு உண்மையான அதிரடி நாயகன்தான். ஆனால் அதே நேரத்தில் பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜியே சரியான பொருத்தம் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor turned Politician Satrughan Sinha is going to join in Congress by April 6, sources says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X