டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அதிரடி நாயகன்தான்.. யார் இல்லைனு சொன்னது?.. ஆனா மம்தா.. பாஜக எம்பி சத்ருஹன் சின்ஹா

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி ஒரு உண்மையான அதிரடி நாயகன்தான். ஆனால் மம்தா பானர்ஜிதான் பிரதமர் பதவிக்கு சரியானவர் என சத்ருஹன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாட்னா சாஹிப்பின் பாஜக எம்பியாக உள்ளவர் நடிகர் சத்ருன் சின்ஹா. இவர் பாஜகவில் அதிருப்தி எம்பியாக தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் கொல்கத்தாவில் நடைபெற்றது.

விவகாரம்

விவகாரம்

இந்த கூட்டத்தில் சத்ருஹன் சின்ஹா பேசுகையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர். ரஃபேல் ஊழல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அதை மறக்கடிக்க பாஜக தலைவர்கள் ராமர் கோயில் விவகாரத்தை பேசி வருகின்றனர்.

பாஜகவுக்கு எதிரான கருத்து

பாஜகவுக்கு எதிரான கருத்து

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பொதுக் கூட்டம் தான் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது என்றார். அத்துடன் ரபேல் விமான ஒப்பந்தம் எச்ஏஎல்லிடம் கொடுக்காமல் 11 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனில் அம்பானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் டுவிட்டரிலும் பாஜகவுக்கு எதிரான கருத்தையே சத்ருஹன் சின்ஹா தெரிவித்தார்.

அதிருப்தி

அதிருப்தி

இந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என கருத்து எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் பாஜக அரசை விமர்சனம் செய்து பேசியது தொண்டர்கள், தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தம்

பொருத்தம்

இந்த நிலையில் சத்ருஹன் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில்
பிரதமர் நரேந்திர மோடி ஒரு உண்மையான அதிரடி நாயகன்தான். ஆனால் அதே நேரத்தில் பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜியே சரியான பொருத்தம் என்று பகீர் தகவலை சத்ருஹன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

English summary
MP Satrughan Sinha says that PM Narendra Modi is really an action hero. But PM post is suitable only for Mamata Banerjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X