டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடக்குமோ.. இந்தியா வரும் சவுதி சல்மான்.. பாகிஸ்தானுக்கு எதிரே முக்கிய அறிவிப்பு வெளியிட முடிவு?

சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தனது இந்திய பயணத்தின் போது பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தனது இந்திய பயணத்தின் போது பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உலகின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி உள்ளார். இவரது நடவடிக்கைகளை உலக நாடுகள் மிக கூர்ந்து கவனித்து வருகிறது.

சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் பாகிஸ்தான் சென்றார்.

பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தான் பயணம்

நேற்று முதல்நாள்தான் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் சென்றார். பாகிஸ்தானில் அவருக்கு மிக உயரிய மரியாதை அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் அவர் மொத்தம் பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். இரண்டு நாள் இந்த சந்திப்பு நடந்தது.

மிக முக்கியம்

மிக முக்கியம்

என்னை சவுதியில் இருக்கும் பாகிஸ்தானின் தூதராக நினைத்துக் கொள்ளுங்கள், முடி இளவரசராக நினைக்க வேண்டாம், இதுதான் சல்மான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கூறியது. அந்த அளவிற்கு இரண்டு நாடுகளும் நட்பு நாடுகள் ஆகி இருக்கிறது. அதேபோல் பாகிஸ்தானின் மிக உயரிய விருதான ''நிஷான் - இ - பாகிஸ்தான்'' விருதும் சல்மானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியா வருகிறார்

இன்று இந்தியா வருகிறார்

இந்த நிலையில்தான் சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார். இவர் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக இந்தியா வராமல் சவுதி அரேபியா சென்றுவிட்டு பின் இந்தியா வர உள்ளார். இந்தியா எதிர்ப்பு காரணமாக அவர் சவுதி சென்றுவிட்டு இந்தியா வருகிறார். இன்றும் நாளையும் அவர் இந்தியாவில் இருப்பார்.

முக்கிய ஒப்பந்தம்

முக்கிய ஒப்பந்தம்

இந்த சந்திப்பில் நாளை முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. வர்த்தகம், தொழில்துறை, போக்குவரத்து, பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை செய்ய இருக்கிறார்கள். அதேசமயம் இந்த சந்திப்பில் இரண்டு நாட்டு தலைவர்களும் தீவிரவாதத்திற்கு எதிராக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறார்கள் என்று செய்திகள் வருகிறது. அது பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு எதிரான வகையில் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால், பாகிஸ்தான் நாட்டுடன் உலகின் எந்த தலைவரும் இல்லாத அளவிற்கு மிக நெருக்கமான தலைவராக சல்மான் இருக்கிறார். நேற்றைய அவரது பாகிஸ்தான் பயணம் இன்னும் அவரை அந்நாட்டுடன் நெருக்கமாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் சல்மான் பாகிஸ்தானுக்கு எதிராக பேசுவாரா, இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இந்தியா

ஆனால் இந்தியா

அதேசமயம் இந்தியா ஏற்கனவே சவுதி - பாகிஸ்தான் நெருக்கம் காரணமாக கடுமையான கோபத்தில் இருக்கிறது. இதனால் இன்று சல்மானை பாகிஸ்தானுக்கு எதிராக பேச வைப்பதற்கு இந்தியா முயற்சி செய்யலாம் என்கிறார்கள். இந்தியாவும் ஆசியாவில் மிகப்பெரிய நாடு என்பதால், சவுதியால் இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள். சல்மான் இதனால் எந்த பக்கம் என்ன நிலைப்பாடு எடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

சீனா குழப்பம்

சீனா குழப்பம்

ஆனால் இதெல்லாம் முடிந்த பின்தான் உண்மையான குழப்பமே தொடங்க உள்ளது. இந்திய பயணத்திற்கு பின் சல்மான் சீனா செல்கிறார். சீனா நீண்ட நாட்களாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் நண்பன் சவுதியும் சீனாவுடன் நெருக்கம் காட்ட போகிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. சவுதியும் - சீனாவும் நட்பு நாடுகள் ஆவது, இந்தியாவிற்கு மேலும் தலைவலியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Saudi Crown Prince Mohammed Bin Salman may announce something BIG against Pak today on his India trip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X