டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகா: 15 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.. பரபரத்த விவாதங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

    டெல்லி: கர்நாடகத்தில் 15 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

    கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சி அமைக்கப்பட்டது. இரு கட்சிகளின் எம்எல்ஏக்களிடையே அமைச்சர் பதவி மோகம், அதிகார போட்டி உள்ளிட்டவைகளால் கூட்டணிக்குள் கலகம் வெடித்தது.

     SC adjourns judgement on Karnataka disqualified MLA case

    இதையடுத்து இரு கட்சிகளைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது. 15 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து ஆளுநரின் உத்தரவின் பேரில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை குமாரசாமி நடத்தி அதில் தோல்வி அடைந்தார்.

    இதனால் குமாரசாமியின் ஆட்சி ஒரே ஆண்டில் கவிழ்ந்தது. இதையடுத்து தகுதி நீக்கத்தை எதிர்த்து 15 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். 15 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 5ல் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனிடையே எடியூரப்பா பாஜக ஆலோசனை கூட்டத்தில் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.

    தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி.. வெற்றி இந்தியாவுக்கா? சீனாவுக்கா?தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி.. வெற்றி இந்தியாவுக்கா? சீனாவுக்கா?

    அதில் கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 15 எம்எல்ஏக்களும் மும்பையில் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருந்தனர். பாஜக ஆட்சி அமைக்க தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை தியாகம் செய்துள்ளனர். அதுதான் ஆபரேஷன் தாமரை என எடியூரப்பா பேசுவது போல் உள்ளது.

    இதை பார்க்கும் போது குமாரசாமி தலைமையிலான ஆட்சியை பாஜக திட்டமிட்டு கவிழ்த்தது போல் உள்ளது. இந்த நிலையில் தகுதி நீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில் சிபல், எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோ பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டார்.

    அதற்கு நீதிபதி ரமணா, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்த எடியூரப்பாவின் ஆடியோ தீர்ப்பின் போது கவனத்தில் கொள்ளப்படும் என்றார். பின்னர் தகுதிநீக்க தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    English summary
    Supreme Court adjourns judgement in Karnataka's 15 Disqualified MLAs case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X