டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை உள்ளதா? களமிறங்கும் உச்ச நீதிமன்றம்.. அடுத்த வாரம் விசாரணை!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய குடிமகன் கிடையாது, அதனால் அவர் தேர்தலில் போட்டியிட கூடாது என்று தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுக்க உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை உள்ளதா?.. உச்ச நீதிமன்றம் விசாரணை!- வீடியோ

    சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய குடிமகன் கிடையாது, அதனால் அவர் தேர்தலில் போட்டியிட கூடாது என்று தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுக்க உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம் மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. முடிந்து போன இந்த பிரச்சனை வடஇந்திய அரசியலை மீண்டும் உலுக்க தொடங்கி உள்ளது. ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா, அவர் இந்திய குடிமகன் கிடையாதா என்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

    SC agrees to consider the plea against Rahul Gandhis dual citizenship issue in next week

    ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போதுதான் இந்த பிரச்சனை தொடங்கியது. ராகுல் இரட்டை குடியுரிமை வைத்து இருக்கிறார் என்று அமேதியில் சுயேச்சை வேட்பாளர் துருவ் லால் என்பவர் புகார் அளித்து இருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இந்த புகாரை நிராகரித்துவிட்டது. ராகுல் காந்தியின் வேட்புமனுவும் இரண்டு தொகுதிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    காங். என்னை கொல்ல கனவு காண்கிறது.. ஆனால் எனக்கு பின் ஒரு கூட்டமே உள்ளது.. மோடி பன்ச்!காங். என்னை கொல்ல கனவு காண்கிறது.. ஆனால் எனக்கு பின் ஒரு கூட்டமே உள்ளது.. மோடி பன்ச்!

    இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பேர் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய குடிமகன் கிடையாது, அதனால் அவர் தேர்தலில் போட்டியிட கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 2015ல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிட்டு இருந்ததை ஆதாரமாக வைத்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    இதன் மீதான விசாரணை அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை தொடங்கும் முன் இந்த வழக்கு மீதான விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் 2015லேயே ராகுல் காந்திக்கு எதிராக குடியுரிமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Supreme Court agrees to consider the plea against Rahul Gandhi's dual citizenship issue in next week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X