டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

NEET Exam 2020: நீட் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ல் தேர்வு நடத்துங்கள் - உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் அக்டோபர்14 ஆம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் அக்.14 ஆம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதியன்று நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்ட் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக ஆண்டு தோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது.

SC allows NEET on October 14 for students who could not appear in September due to COVID-19

இந்நிலையில் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்த பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். எனினும் எதிர்ப்பை மீறி செப்டம்பர் 13ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் 14,37,000 பேர் எழுதிய நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
விடைக்குறிப்புகளை சரி பார்த்து அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் தகவல் தெரிவிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 12ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி, நீட் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம், கட் ஆப் விவரம் உள்ளிட்டவை இன்று மாலை அல்லது நாளைக்குள்ளாக வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ntaneet.nic.in என்ற இணையதளம் அல்லது nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பார் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதித்தவர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர்கள் நீட் தேர்வை எழுத முடியாமல் போனது, இந்த நிலையில் நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு வரும் 14ஆம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதியவர்களுக்கு வரும் 16ஆம் தேதியன்றே ரிசல்ட் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
The Supreme Court on Monday allowed NEET exam to be conducted on October 14 for students who could not appear for it due to COVID-19 infection or because of residing in containment zones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X