டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மீது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு எடுக்காத நிலையில் அவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்யலாம் என பேரறிவாளனின் வழக்கறிஞர் சங்கரநாராயணன் கூறியுள்ளார்.

SC can order to Release Seven Tamils in Rajiv Case, says Perarivalan Counsel

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது பேரறிவாளன் வழக்கு. இந்த வழக்கு விசாரணையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 2 ஆண்டுகளாக முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம் ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மேலும் ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் அவருக்கு உத்தரவிட முடியுமா? என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் பரிசீலிப்பதாக கூறியுள்ளது. இந்த விசாரணையில் பேரறிவாளன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சங்கர நாராயணன் கூறியதாவது:

ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம் ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும். அப்படி ஒப்புதல் தராத நிலையில் அல்லது முடிவு எடுக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தின் நிலோபர் நிஷா தீர்ப்பின்படி, நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரமான அரசியல் சாசனத்தின் 142-ன் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்ய நீதிமன்றமே உத்தரவிட முடியும். இவ்வாறு சங்கரநாராயணன் கூறினார்.

ராஜீவ் வழக்கு: 7தமிழர் விடுதலை குறித்து முடிவு எடுக்காத தமிழக ஆளுநர்-உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி ராஜீவ் வழக்கு: 7தமிழர் விடுதலை குறித்து முடிவு எடுக்காத தமிழக ஆளுநர்-உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

English summary
Perarivalan's counsel Shankararayanan told Supreme Court the court exercised powers under Article 142 to order to release Seven Tamils in Rajiv Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X