டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்- கொலிஜியம் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது.

தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை கொலிஜியம் நியமித்தது.

SC Collegium issues statment on transfer of Judges

தமது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய தஹில் ரமானி விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இதுமிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால் அகில இந்திய பார்கவுன்சில், கொலிஜியம் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றது. இந்த நிலையில் தலைமை நீதிபதிகள்- நீதிபதிகள் இடமாற்றம் குறித்து கொலிஜியம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முழுமையாக பரிசீலித்து நீதிபதிகள் குழு ஒருமனதாக எடுத்த முடிவின்படிதான் இடமாற்றங்கள் செய்யப்படுகின்றன.

SC Collegium issues statment on transfer of Judges

சிறப்பான நீதி நிர்வாகத்தை கருத்தில் கொண்டுதான் இடமாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. வேறு சில மாநில நீதிபதிகள் மாற்றத்தையும் கொலிஜியம் மேற்கொண்டிருக்கிறது. பொதுவாக நீதிபதிகள் இடமாற்றத்துக்கான காரணத்தை தெரிவிப்பது நீதித்துறை நலனுக்கு உகந்தது அல்ல.

அதேநேரத்தில் தேவைப்பட்டால் இடமாற்றத்துக்கான காரணத்தை தெரிவிக்கவும் கொலிஜியம் தயங்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme Court Collegium today issued as statement on controversy around recent transfers of Chief Justice/Judges of High Courts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X