டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை.. முடிவு மதுரை ஹைகோர்ட் கையில்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டிக்டாக் செயலி மீது தீர்ப்பு வழங்குமாறு ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டிக்-டாக் செயலி மீதான தடை குறித்த வழக்கில், வரும் 24ம் தேதி உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.

இன்று இளசுகளிடையே பிரபலமாக உள்ளது டிக்-டாக் ஆப்! அதை விட நம்மவர்களை பைத்தியமாக்கி விட்டது. கொஞ்சம் ஓவராகவே ஆடி விட்டனர் நமது இளைஞர்கள்.

இது சீனாவில் இருந்து 2016-ல் நம்ம நாட்டுக்கு வந்தது. இளசுகளை வெகுவாக கவர்ந்த இந்த ஆப்பிற்கு கிட்டத்தட்ட மாணவர்கள் முதல் பலரும் அடிமையாகவே ஆகிவிட்டனர்.

தமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம் தமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்

விஷயம் விபரீதமானது

விஷயம் விபரீதமானது

அது மட்டும் இல்லை, இந்த ஆப்பை பயன்படுத்தியவர்கள் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் தற்கொலையே செய்து கொண்டனர். மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்துதான் விஷயம் சீரியஸானது!

முத்துக்குமார்

முத்துக்குமார்

பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று எஸ். முத்துக்குமார் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிக்-டாக் செயலியை தடை செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது எனவும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இதனால் நாலாபுறமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

24-ம்தேதி தீர்ப்பு

24-ம்தேதி தீர்ப்பு

அப்போது டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் மனுவை ஹைகோர்ட் விசாரித்து தீர்ப்பளிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 24-ம் தேதியே இது சம்பந்தமாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் டிக்-டாக் மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

English summary
SC asks Madras High Court to decide on a plea against ban order on video app Tik Tok on April 24
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X