டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்பயா குற்றவாளிகள் 2 பேரின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    Supreme Court dismisses curative petition of two convicts

    டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் 2 பேரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

    2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்து மாணவி நிர்பயா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இக்கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு வரும் 22-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    SC dismisses Two Nirbhaya case convicts curative petitions

    இதற்காக டெல்லி திகார் சிறையில் ஒத்திகையும் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் சிங் இருவரும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

    பெல்ட் வெடிகுண்டு... பேரறிவாளன் வழக்கில் சிபிஐ அறிக்கை மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்திபெல்ட் வெடிகுண்டு... பேரறிவாளன் வழக்கில் சிபிஐ அறிக்கை மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

    இருவரது மனுக்களையும் உச்சநீதிமன்றத்தின் என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிற்பகல் விசாரித்தது. பின்னர் 2 பேரின் மனுக்களையும் 5 நீதிபதிகள் கொண்ட இந்த பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து 4 பேருக்கும் வரும் 22-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

    English summary
    The Supreme Court today dismissed the curative petitions of two convicts Vinay Kumar Sharma and Mukesh Singh in Nirbhaya case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X