டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகர் பதில் தர மேலும் 4 வாரம் அவகாசம்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செயக் கோரும் வழக்கில் சபாநாயகர் தனபால் பதிலளிக்க உச்சநீதிமன்றம் மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழக சட்டசபையில் 2017-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது அதிருப்தி அணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.

SC gives Four more weeks to TN Speaker response on 11 MLA Disqualification Case

ஆகையால் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கில் தமிழக சபாநாயகர் தனபால் பதிலளிக்க ஏற்கனவே 4 வார கால அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் உச்சநீதிமன்ற பதிவாளர் நீதிமன்ற நீதிபதி அனில் லட்சுமன் பன்சாரே பெஞ்ச் முன்னிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா?மைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா?

அப்போது, சபாநாயகர் தனபால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று சபாநாயகர் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கின் விசாரணை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English summary
The Supreme Court Gaver Four more weeks to Tamilnadu Speaker response on 11 MLA Disqualification Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X