டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்பட சென்ட்ரல் விஸ்டா நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. தூசி பரவலைத் தடுக்க கருவிகளை பொருத்த நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். 2022ஆம் ஆண்டில் 971 கோடி ரூபாய் செலவில் இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SC gives green signal to Central Vista project in 2:1 verdict

புதிய முக்கோண நாடாளுமன்றக் கட்டடம் 900 முதல் 1200 எம்பிக்கள் வரை அமரும் திறன் கொண்டது. இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 5-ஆ்ம தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது. எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட டிசம்பர் 7இல் அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ம.பி: ராமர் கோவில் நிதி வசூல் பேரணி- மத மோதல் நிகழ்ந்த கிராமத்தில் 13 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பும.பி: ராமர் கோவில் நிதி வசூல் பேரணி- மத மோதல் நிகழ்ந்த கிராமத்தில் 13 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

இந்த வழக்கின் தீர்ப்பை கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அடங்கிய பெஞ்ச் இன்று வழங்கியது. அப்போது அவர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்பட சென்ட்ரல் விஸ்டா நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்தனர்.

மேலும் தூசி பரவலைத் தடுக்க கருவிகளை பொருத்த நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். அத்துடன் நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மத்திய கூடத்திலும் தூசி பரவலை தடுக்க கருவி பொருத்தவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் இரு நீதிபதிகள் அனுமதி அளிக்கலாம் என்றும் ஒரு நீதிபதி எதிர்மறையாகவும் தீர்ப்பளித்தார். நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் மகேஸ்வரி நில பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை உறுதிப்படுத்தினர். ஆனால் மற்றொரு நீதிபதியான சஞ்சீவ் கன்னா மத்திய விஸ்டா திட்டத்திற்கான நில பயன்பாட்டில் மாற்றம் செய்தது மோசமானது என தெரிவித்தார்.

English summary
Supreme Court gives green signal to Central Vista project in 2:1 verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X