டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி தலைக்கு மேல் கத்தி.. 4 வாரத்தில் குஜராத் வழக்கு விசாரணை.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

குஜராத் கலவர வழக்கின் விசாரணை 4 வாரத்துக்கு பின் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்கு எதிரான வழக்கு... 4 வாரத்தில் விசாரணை- வீடியோ

    டெல்லி: குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்கில் இருந்து அப்போதைய அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை விடுவித்தது தொடர்பான வழக்கை இன்னும் 4 வாரங்களுக்கு பின் விசாரிப்பதாக சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளது.

    2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, சபர்மதி ரயிலின் பெட்டி ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டதில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் 59 பேர் பலியாகினர்.

    ஆனால், பழியை தூக்கி இஸ்லாமியர்கள் மீது போட்ட சங்-பரிவார அமைப்பு, குஜராத் மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்டது.

    இசான் ஜாப்ரி

    இசான் ஜாப்ரி

    இந்த கலவரத்தில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக ஆமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த வன்முறையில் மட்டும் 68 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் முன்னாள் எம்பி இசான் ஜாப்ரியும் ஒருவர் ஆவார்.

    தொடர்பு இல்லை

    தொடர்பு இல்லை

    இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, அப்போதைய குஜராத் மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவருக்கு ,இந்த கலவரத்தில் எந்த தொடர்பும் கிடையாது என்று கடந்த 2012-ல் விடுவித்தது.

    மேல்முறையீடு

    மேல்முறையீடு

    இதை எதிர்த்துதான் இசான் ஜாப்ரியா மனைவி ஜாகியா ஜாப்ரி அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு போட, ஆனால் அது தள்ளுபடி ஆகிவிட்டது. அதனால் அவர், சுப்ரீம் கோர்ட்டில் இது சம்பந்தமாக மேல்முறையீடு செய்திருந்தார்.

    4 வார காலங்கள்

    4 வார காலங்கள்

    இந்த வழக்கு நேற்று நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையை, 4 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக, அமர்வு அறிவித்துள்ளது.

    முக்கிய திருப்பம்

    முக்கிய திருப்பம்

    விரைவில் நாடாளுமன்ற வர போவதால், பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ள, முழு வீச்சில் வியூகம் அமைத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். இந்த நிலையில், ஒரு மாத காலம் கழித்து நடைபெறும் கோத்ரா வழக்கின் விசாரணை மிக முக்கிய திருப்பத்தை பாஜகவுக்கு ஏற்படுத்தும் என தெரிகிறது.

    English summary
    Supreme Court to hear after 4 weeks Zaika Jafri's Gujarat riots Plea against to Narendra Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X