டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியை திருடர் என்று விமர்சிப்பதா? ராகுல் மீது பாஜக வழக்கு.. உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பிரதமர் மோடியை திருடர் என்று விமர்சித்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியை திருடர் என்று விமர்சித்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த மறுசீராய்வு வழக்கை இரண்டு மாதமாக விசாரித்து வருகிறது.

இந்த ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். தான் பிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்தும், ரபேல் குறித்தும் பேசினார்.

ஒரு விரல் புரட்சியே.. தமிழக மக்களுக்கு மாபெரும் ஆசிட் டெஸ்ட்.. நாளையுடன் ஓயுது பிரச்சாரம்! ஒரு விரல் புரட்சியே.. தமிழக மக்களுக்கு மாபெரும் ஆசிட் டெஸ்ட்.. நாளையுடன் ஓயுது பிரச்சாரம்!

மோடி ரபேல்

மோடி ரபேல்

மோடி ரபேல் ஒப்பந்தம் மூலம் திருடிவிட்டார். அம்பானிக்கு இவர் 30000 கோடி ரூபாயை அளித்து திருடுவதற்கு உதவி இருக்கிறார். மோடிதான் ரபேல் ஊழலில் முதல் குற்றவாளி. அவரை காங்கிரஸ் ஆட்சியில் விசாரிப்போம்.

காவலாளி இல்லை

காவலாளி இல்லை

மோடி தன்னை காவலாளி என்கிறார். ஆனால் மோடி காவலாளி கிடையாது. மோடிதான் திருடர். உச்ச நீதிமன்றமே இப்படித்தான் கூறியுள்ளது. வேலியே பயிரை மேய்வது போலத்தான் தற்போது மோடி மக்களை காக்காமல் திருடிவிட்டார் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.

பாஜக வழக்கு

பாஜக வழக்கு

இந்த நிலையில் ராகுலின் கருத்துக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை நீதிமன்ற அவமதிப்பு என்று பாஜக வழக்கு தொடுத்துள்ளது. பிரதமரை ராகுல் தரைகுறைவாக பேசுகிறார் என்று பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி மூலம் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது .

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்த நிலையில் இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மோடியை தரக்குறைவாக பேசியது ஏன் என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. ஏப்ரல் 22ம் தேதிக்குள் ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

English summary
SC issues notice to Congress president Rahul Gandhi over is remarks against Modi on a contempt petition by BJP and seeks Gandhi's response by April 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X