டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாய சட்டங்கள்... விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

Google Oneindia Tamil News

டெல்லி: மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில் 4 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவை அங்கீகரித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு இருந்தார்.

SC issues notice to the Centre on petitions challenging the three farm laws

இந்த நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் விவசாய அமைப்புகள், திமும, காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. பஞ்சாபில் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி நடத்தி இருந்தார். இன்னும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

SC issues notice to the Centre on petitions challenging the three farm laws

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் சார்பில் இடம் பெற்று இருந்த ஒரே மத்திய அமைச்சர் ஹர்சிம் ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.

விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ. 100 நாணயம்... பிரதமர் மோடி வெளியிட்டார்!!விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ. 100 நாணயம்... பிரதமர் மோடி வெளியிட்டார்!!

இதற்கு முன்னதாக திமுக எம்பி சிவா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தன. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த சட்டங்களை எதிர்த்து தமிழக் அரசும் உச்ச நீதிமனறத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த வழக்கை பின்னர் ஒத்தி வைத்தார்.

English summary
SC issues notice to the Centre on petitions challenging the three farm laws
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X