டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாமானியர்களின் தீபாவளி கொண்டாட்டம் உங்க கையில்தான்.... வட்டிக்கு வட்டி வழக்கில் உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது இல்லை என்ற முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காலத்தில் வங்கிக் கடன்கள் வசூலிப்பது 6 மாத காலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த 6 மாத கால வட்டிக்கும் வட்டி வசூலிப்போம் என்ற வங்கிகள். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

SC nudge to Centre on loan relief case

இவ்வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாண பத்திரத்தில், ரூ2 கோடி வரை கடன் வாங்கியவர்களின் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறை ரத்து செய்யப்படும்; வட்டிக்கு வட்டி கட்டியிருந்தால் அது திரும்பத் தரப்படும் எனவும் கூறியிருந்தது. இன்றும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்புசமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு

அப்போது, வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்பதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு 1 மாதம் அவகாசம் கோரியது. ஆனால் உச்சநீதிமன்றமோ, தீபாவாளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கிவிட்டன. சாமானிய மக்கள் தீபாவளியை கொண்டாடுவது எல்லாம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஆகையால் இந்த வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்பதை விரைவாக அமல்படுத்துங்கள் என அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English summary
The Supreme Court on Wednesday said that the Government should implement at the earliest the waiver on compounded interest on loans of up to Rs 2 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X