டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி சமரச குழு ஜூலை 18-ல் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை பங்கிடுவது தொடர்பாக சமரச குழு வரும் 18-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகள் பங்கிடலாம் என்பது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

SC orders Ayodhya mediation panel to submit report by July 18

இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண சமரச குழு ஒன்றை அமைத்தது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட சமரச குழுவுக்கு ஆகஸ்ட் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இன்று மாலை 6 மணி கெடு.. சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி இன்று மாலை 6 மணி கெடு.. சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

ஆனால் இந்த சமரச குழு மீது அதிருப்தி தெரிவித்து சில இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன. இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 18-ந் தேதிக்குள் சமரச குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அத்துடன் விரிவான அறிக்கையை ஜூலை 25-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Supreme Court has ordered the Ayodhya mediation panel to submit a report by July 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X