டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Google Oneindia Tamil News

டெல்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விவரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் மும்பை போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    Dhoni Retirement | Sushant - Dhoni Throwback Moments | Oneindia Tamil

    பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலை அல்ல; கொலை என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

    SC to order on CBI probe into Sushant Singh death today

    சுஷாந்த்சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகார் அரசும் விசாரணை நடத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிரா மாநில அரசும் விசாரணைகளை மேற்கொண்டது.

    இதில் இரு மாநில அரசுகளிடையே மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது பீகார் அரசு. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி மீது அவரது தந்தை பீகார் போலீசில் புகார் செய்தார். மேலும் ரியா சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கப் பிரிவு முன்பும் ரியா விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

    6 மாதம் பணப்பரிவர்த்தனை செய்யாதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படாது.. கரூவூலத் துறை விளக்கம்6 மாதம் பணப்பரிவர்த்தனை செய்யாதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படாது.. கரூவூலத் துறை விளக்கம்

    இந்நிலையில் தம் மீது பீகார் போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்றும் வழக்கு விவரங்களை மும்பை போலீஸ், சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    English summary
    The Supreme Court will pronounce its verdict today whether CBI should investigate the mysterious death of Actor Sushant Singh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X