டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்; இன்றும் விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக வேலூர் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இதனை விசாரித்தது.

SC refuses to stay NEET Exam

அப்போது, ஆண்டுதோறும் சட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஆகையால் நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என நீதிபதி அருண் மிஸ்ரா பெஞ்ச் தெரிவித்தது.

மேலும் இவ்வழக்கில் இன்றும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 17% குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை: உச்சநீதிமன்றம் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை: உச்சநீதிமன்றம்

நடப்பாண்டில் 1.17 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு 1.40 லட்சம் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேசிய அளவில் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 74,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு எழுதி 4,202 பேர் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இவர்களில் 70% பேர் அதாவது 2,916 மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து ஓராண்டுக்குப் பின்னர் நீட் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court has refused to stay NEET exams on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X