டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறி பெண் ஊழியருக்கு மீண்டும் பணி

Google Oneindia Tamil News

டெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக புகார் அளித்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

SC reinstates employee who filed sexual harassment complaint against Ex-CJI ranjan gogoi

அவரது தனது புகாரில் கோகாயின் பாலியல் துன்புறுத்தலை தான் ஏற்காத காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் கூறி அதிரவைத்தார்.

இந்த புகாரை அடுத்து அவர் நீதிமன்றத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தன்மீதானப் புகாரைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயே விசாரிக்க முன்வந்தார். அதன்பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இப்புகாரை விசாரித்தது. விசாரணை முடிவில் ரஞ்சன் கோகோய் குற்றமற்றவர் என்று தெரிவித்தது. இதற்கிடையே விசாரணை நடைபெறும் போதே அந்த பெண் ஊழியர் தனது புகாரை திரும்ப பெற்றார்.

இதனிடையே விசாரணை முடிந்த பின்னர் ரஞ்சன் கோகாய் மீது குற்றம்சாட்டிய பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. . அவர் பணியில் இல்லாத இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளமும் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பணியில் சேர்ந்த அந்த பெண் மீண்டும் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

English summary
women employee again get job in supreme court, who filed sexual harassment complaint on former CJI ranjan gogoi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X