டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Nirbhaya case | Convicts Will Now Hang On Feb 1

    டெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பவன் குமார், குற்ற சம்பவத்தின் போது தனக்கு 18 வயது நிறைவடையவில்லை என்று கூறி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    2012 டிசம்பரில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடு ரோட்டில் தூக்கிவீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு? இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க! ஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு? இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க!

    ஒருவர் தற்கொலை

    ஒருவர் தற்கொலை

    இதையடுத்து விரைந்து செயல்பட்ட டெல்லி போலீசார் குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்தனர். இதில் ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் மற்றம் பவன்குமார் குப்தா ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    பிப்ரவரி 1ல் தூக்கு

    பிப்ரவரி 1ல் தூக்கு

    இந்த நான்கு பேரின் தண்டனையையும் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் நான்கு பேரின் மரண தண்டனையை பிப்ரவரி 6ம் தேதி காலை 6மணிக்கு ஒத்திவைத்துள்ளது. இதற்காக திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள சிறை எண் 3க்கு குற்றவாளிகள் 4 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

    18வயதாகவில்லை

    18வயதாகவில்லை

    4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அவர் தனது மனுவில் நிர்பயா பலாத்கார சம்பவத்தின் போது தனக்கு 18வயது நிறைவடையவில்லை என்றார்.

    1996ல் பிறந்தவர்

    1996ல் பிறந்தவர்

    இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூசன் மற்றும் ஏஎஸ் போபன்னா ஆகியோர் அமர்வு விசாரித்தது. மனுதாரர் குப்தாவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏபி சிங், குப்தாவின் பள்ளி சான்றிதழ் படி, அவரது பிறந்த நாள் 1996ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி என்றும் இதை டெல்லி உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

    உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    அதே நேரம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளி குப்தாவுக்கு 2012ம் ஆண்டு 18வயது நிறைவடைந்துவிட்டதாக கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் பவன்குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது.

    பிப்ரவரி 1ல்

    பிப்ரவரி 1ல்

    இதையடுத்து முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் மற்றம் பவன்குமார் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளையும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட எந்த தடையும் இல்லை என்ற நிலை வந்துள்ளது.

    English summary
    SC rejects Nirbhaya case death row convict Pawan Kumar's plea that he was a juvenile at the time of crime in December 2012. SC accepted police plea that his birth certificate showed that he was 19 years at the time of crime.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X