டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவின் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம இடைக்கால தடை

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிராவில் கல்லூரிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா ஜாதியினருக்கான 16% இடஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினர் 30% பேர் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பல வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களை முன்னெடுத்தனர்.

SC stays 16% Maratha quota for govt jobs, college admissions

இதனாலேயே மகாராஷ்டிரா அரசு 16% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை 2018-ல் நிறைவேற்றியது. இச்சட்டத்துக்கு எதிராக மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் மகாராஷ்டிரா அரசின் இடஒதுக்கீட்டு சட்டம் செல்லும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இடஒதுக்கீடு அளவை 12% முதல் 13% ஆக குறைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த்து.

இதனிடையே மகாராஷ்டிரா அரசின் இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடுகள் 50% மீறாததாக இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாக மகாராஷ்டிரா இடஒதுக்கீடு இருக்கிறது என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

என்னாது பாங்கோங் த்சோ ஏரியில் சீன சுற்றுலாப் பயணிகளா? பொய்யான தகவலுடன் வலம் வரும் வீடியோஎன்னாது பாங்கோங் த்சோ ஏரியில் சீன சுற்றுலாப் பயணிகளா? பொய்யான தகவலுடன் வலம் வரும் வீடியோ

இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்தரா பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.

அதில், கல்லூரிகள், வேலைவாய்ப்பில் மராத்தா ஜாதியினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது; இவ்வழக்கை தலைமை நீதிபதி போட்பே தலைமையிலான கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க பரிந்துரைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Supreme Court today passed an interim order staying for the Maratha quota for reservations in Govt jobs and colleges in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X