டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!

பிரதமர் மோடியை திருடர் என்று விமர்சனம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியை திருடர் என்று விமர்சனம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு முடிவிற்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த மறுசீராய்வு வழக்கை இரண்டு மாதமாக விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். லோக்சபா தேர்தல் முழுக்க ராகுல் காந்தி பிரதமர் மோடியை ரபேலை வைத்து விமர்சனம் செய்தார்.

அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடுஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

மோடி ரபேல் ஒப்பந்தம் மூலம் திருடிவிட்டார். அம்பானிக்கு இவர் 30000 கோடி ரூபாயை அளித்து திருடுவதற்கு உதவி இருக்கிறார் என்று குறிப்பிட்டார். தான் பிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்தும், ரபேல் குறித்தும் பேசினார்.

சர்ச்சையாக என்ன சொன்னார்

சர்ச்சையாக என்ன சொன்னார்

இதற்காக ராகுல் காந்தி, காவலாளியே திருடர் என்று பொருள்படும் வகையில் சவுக்கித்தார் சோர் ஹே என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் ராகுலின் கருத்துக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.பிரதமரை ராகுல் தரக்குறைவாக பேசுகிறார் என்று பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி மூலம் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது .

மன்னிப்பு

மன்னிப்பு

இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பியது. மோடியை பற்றி தவறாக பேசியது ஏன் என்று நீதிமன்றம் விளக்கம் கேட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் ஆன ராகுல் காந்தி தன்னுடைய கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பின் மீண்டும் ராகுல் காந்தி மன்னிப்பு கோரினார்.

நாளை தீர்ப்பு

நாளை தீர்ப்பு

இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதா அல்லது அவருக்கு தண்டனை வழங்குவதா என்று உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கே.எம் ஜோசப், சஞ்சன் கிசான் கவுல் ஆகியோர் அமர்வு இதை விசாரித்தது. நாளை மதியம் ரபேல் மறுசீராய்வு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

English summary
Chowkidhar Chor Hai: SC to give a verdict on the case against Rahul's remarks against Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X