டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு: 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 11 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 17-ந் தேதி தள்ளுபடி செய்தது.

நீட், ஜேஇஇ-க்கு எதிரான மனு தள்ளுபடி- உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி 6 மாநிலங்கள் மனுநீட், ஜேஇஇ-க்கு எதிரான மனு தள்ளுபடி- உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி 6 மாநிலங்கள் மனு

 SC to hear tomorrow Review Petitions Filed By Seven States on NEET, JEE Exams

இதனிடையே புதுச்சேரி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. அதில் தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் 7 மாநிலங்களும் வலியுறுத்தி இருந்தன.

மணல் கடத்தல் வழக்குகளில் இனி முன்ஜாமீன் இல்லை- 40 மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடிமணல் கடத்தல் வழக்குகளில் இனி முன்ஜாமீன் இல்லை- 40 மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

இந்த 7 மாநிலங்களின் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெறும்.

English summary
The Supreme Court Bench headed by Justice Ashok to hear tomorrow the review Petition filed by 7 states against the Order dismissing Pleas seeking to postpone the conduct of NEET and JEE Exams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X