டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை!

3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது என்று அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்... உச்ச நீதிமன்றம் அதிரடி தடை!

    டெல்லி: 3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க திட்டமிட்டு தமிழக சட்டசபை சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது என்று அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீதான விசாரணை இன்று நடந்தது.

    அமமுகவிற்கு நெருக்கமாக இருக்கும் 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டு வருகிறது. தேர்தல் முடிவை பொறுத்து இவர்களுக்கு எதிராக அதிமுக நடவடிக்கை எடுக்கும்.

    பெரும்பான்மை இல்லை

    பெரும்பான்மை இல்லை

    அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் இவர்கள் மூவரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

    நம்பிக்கையில்லா தீர்மானம்

    நம்பிக்கையில்லா தீர்மானம்

    இந்த நிலையில் இதை தடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் உள்ள போது அவர் அவையில் உள்ள எந்த எம்எல்ஏவையும் நீக்க முடியாது. அதே சமயம் சபாநாயகர் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை தடுக்கும் பொருட்டு திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது.

    அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு

    அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு

    திமுகவை தொடர்ந்து அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்கள்,அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன் ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு இன்று காலை விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார்.

    தடை

    தடை

    இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. 3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க திட்டமிட்டு தமிழக சட்டசபை சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது தவறானது, அதனால் அவர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து விளக்க வேண்டும் என்று நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    English summary
    Supreme Court will hear the 2 AIADMK rebel MLA's case against their disqualification today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X