டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஞானவாபி வழக்கு.. ரிப்போர்ட் லீக்கானது தவறு.. வாரணாசி மாவட்ட கோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: ஞானவாபி மசூதி தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுகிறோம், மூத்த நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் பகுதியை சீல் செய்ய போடப்பட்ட உத்தரவு தொடரும். லிங்கம் இல்லாத இடத்தில், இஸ்லாமியர்களை தொடர்ந்து அங்கு வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஞானவாபி மசூதி பகுதியில் இந்து கோவில் இருந்ததாகவும், உள்ளே லிங்கம் இருந்ததாகவும் இந்துத்துவா அமைப்பினர் புகார் வைத்ததே இந்த வழக்கிற்கு காரணம் ஆகும். இந்து பிரிவினர் பலர் ஞானவாபி மசூதி என்பது அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு 1669ல் அவுரங்கசீப் மூலம் கட்டியதாக கூறி வருகின்றனர்.

இங்கு இருக்கும் மசூதியை இடிக்கவும், அங்கு உடனே இந்து வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவும் வேண்டும் என்று இந்துக்கள் சார்பாக அப்போது தொடுக்கப்பட்ட வழக்கை அலஹாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போது இதில் புதிய வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

ஞானவாபி மசூதி - சிவலிங்க வழக்கு.. இன்று விசாரணை செய்யும் உச்ச நீதிமன்றம்.. பின்னணி என்ன?ஞானவாபி மசூதி - சிவலிங்க வழக்கு.. இன்று விசாரணை செய்யும் உச்ச நீதிமன்றம்.. பின்னணி என்ன?

வழிபாடு

வழிபாடு


அதன்படி, ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன. இங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும்.. நவராத்தியின் 4வது நாளின் போது மட்டும் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படும். இங்கு எல்லா நாளும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி, 5 பெண்கள் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். . இந்த வழக்கில் வாரணாசி கோர்ட் உத்தரவில், மசூதியில் சர்வே நடத்தும்படி அகழ்வாராய்ச்சி சர்வே அமைப்பிற்கு உத்தரவிட்டது.

வாரணாசி வழக்கு

வாரணாசி வழக்கு

இதை எதிர்த்து உத்தர சன்னி வகுப்பு போர்ட் இயக்குனர் அஞ்சுமான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால் வாரணாசி கோர்ட் உத்தரவை அலஹாபாத் கோர்ட் தடை செய்ய மறுத்துவிட்டது. அதோடு இந்த சர்வே முடிவுகளை சீலிட்டு கோர்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வீடியோ சர்வே ஆதாரங்கள் நேற்றுதான் வாரணாசியில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த சர்வே ஆதாரங்கள் நேற்று வெளியே கசிந்தால் பரபரப்பு ஏற்பட்டது. வாரணாசி கோர்ட் விசாரணை மே 23ம் தேதி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Shivling Found In Gyanwapi Mosque | Gyanvapi மசூதி இந்து கோயிலா? | Oneindia Tamil
    இன்னொரு வழக்கு

    இன்னொரு வழக்கு

    இந்த வழக்கில் சர்வே பணிகளை மேற்பார்வை செய்த அஜய் மிஸ்ரா என்ற வழக்கறிஞரின் போட்டோகிராபர் மூலம் அங்கு சிவலிங்கம் இருந்ததாக சொல்லப்படும் பகுதியின் புகைப்படம் லீக் ஆனது. உள்ளே லிங்கம் இருப்பதாக கூறப்படும் புகைப்படம் வைரலானது. இதையடுத்து ஞானவாபி மசூதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி இங்கே சர்வே பணிகள் செய்வதை தடி செய்ய வேண்டும் என்று மசூதி கமிட்டி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் இந்து அமைப்புகள் வைத்த வாதத்தில், உள்ளே சிவலிங்கம் இருந்ததாக குறிப்பிட்டனர். ஆனால் அது வெறும் நீர் வெளியேற்றும் பவுண்டைன் அமைப்பு என்று கூறினார்.

    சர்வே உத்தரவு

    சர்வே உத்தரவு

    இந்த லீக்கான போட்டோ காரணமாக பிரச்சனை ஏற்படும். இதனால் சர்வே பணிகளை நிறுத்த வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் சிவலிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை சீல் செய்ய சொன்னார்கள். அதே சமயம் இஸ்லாமியர்கள் மற்ற இடங்களில் தொடர்ந்து பாடு வழிபாடு நடத்தலாம் என்று உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்டில் விசாரணை

    சுப்ரீம் கோர்டில் விசாரணை

    இந்த நிலையில் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. ஞானவாபி மசூதி லிங்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிபதிகள் சந்திரசூட், சூர்யா காந்த், பிஎஸ் ரநரசிம்மா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஹரிசங்கர் ஜெயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

    இது போக வாரணாசி கோர்டில், இந்துக்கள் ஞானவாபி பகுதியில் மசூதிக்குள் உள்ளே சிவலிங்கம் கிடைத்த இடத்தில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மனு, உள்ளே இருக்கும் நீர் நிலைகளை நீக்க வேண்டும் என்ற மனு, அஜய் மிஸ்ராவை மீண்டும் சர்வே பணியில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான மனு ஆகியவை குறித்த விசாரணை மே 23ம் தேதி நடத்தப்பட உள்ளது.

     இன்று விசாரணை

    இன்று விசாரணை

    உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், இஸ்லாமிய தரப்பு வைத்த வாதத்தில், ஞாவாபியில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் ஒரு சில மட்டும் தேர்வு செய்யப்பட்டு கசியவிடப்பட்டு உள்ளன. வெளியே தவறான விவாதத்தை, கருத்தை பதவியை வைக்க வேண்டும் என்று ரிப்போர்ட்டின் ஒரு பகுதி மட்டும் கசிய விடப்பட்டு உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. இந்த கமிட்டி ரிப்போர்ட்டை புறக்கணிக்க வேண்டும் என்று வாதம் வைத்தது.

    சந்திரசூட்

    சந்திரசூட்

    இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ரிப்போர்ட் லீக் ஆனது தவறு. அதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. ரிப்போர்ட்டை நீதிபதி மட்டுமே பார்க்கக் வேண்டும். வேறு யார் கைக்கும் செல்ல கூடாது. இது போன்ற விஷயங்கள் தொடர கூடாது. இந்த வழக்கு முக்கியமானது. இதில் நாங்கள் கருத்து சொல்ல போவது இல்லை. அதே சமயம் இதை கீழமை நீதிமன்றம் விசாரிப்பது சரியாக இருக்காது.

    என்ன உத்தரவு

    என்ன உத்தரவு

    அதனால் கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுகிறோம். மூத்த நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பதே சரியாக இருக்கும். இதனால் வழக்கு வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. அதே சமயம் ஞானவாபி மசூதியில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் பகுதியை சீல் செய்யவும், அது இல்லாத இடத்தில, இஸ்லாமியர்களை தொடர்ந்து அங்கு வழிபாடு செய்ய அனுமதித்தும் உத்தரவிட்டு இருந்தோம். வழக்கு விசாரணை முடியும் வரை 8 வாரங்களுக்கு இதே நிலை தொடர வேண்டும். அதே சமயம் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு முன் கை, கால் கழுவ மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    English summary
    SC will hear the in Gyanvapi case today: All the details you need to know. ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X