டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் கைதானது எப்படி?

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அங்கு அதிரடியாக குவிந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுவர் ஏறி குதித்து வீடு புகுந்து ப. சிதம்பரம் அதிரடி கைது

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அங்கு அதிரடியாக குவிந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் களேபரத்திற்கு அடுத்து ப. சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது சினிமாவிற்கு நிகரான அதிரடி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்னும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

    இதனால் அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிரம் கட்டி வந்தனர். இன்று மாலை ப. சிதம்பரம் சிபிஐ அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.

    தொடக்கம்

    தொடக்கம்

    சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் திடீர் என்று இன்று இரவு 8.15 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்தார். அங்கு சரியாக 8 நிமிடம் அவர் பேட்டி அளித்தார். ஆனால் கேள்விகளை எதையும் எதிர்கொள்ளாமல் உடனடியாக அங்கிருந்து கிளம்பினார்.

    என்ன

    என்ன

    இதையடுத்து அங்கு உடனடியாக சிபிஐ அதிகாரிகள் குவிந்தனர். ஆனால் அதற்கு முன் அங்கிருந்து ப. சிதம்பரம் கிளம்பி சென்றார். இதனால் சிபிஐ அதிகாரிகளின் இன்னோர் படை அவரின் காரை வேகமாக பின் தொடர்ந்து சென்றது. நேராக ப. சிதம்பரம் டெல்லியில் ஜோர் பாகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அவரை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் காரில் சென்றனர்.

    எங்கே வந்தனர்

    எங்கே வந்தனர்

    ப. சிதம்பரத்தை பின் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விரைந்து வந்தனர். ப. சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வேகமாக விரைந்து வந்தனர். ஆனால் ப. சிதம்பரம் வீட்டின் வெளி கேட்டை திறக்கவில்லை. ப. சிதம்பரம் பாதுகாவலர்கள் சிபிஐ அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    எகிறி குதித்தனர்

    இதனால் ப. சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். 20 அதிகாரிகள் இப்படி சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். தற்போது ப. சிதம்பரம் வெளியே வர வேண்டும் என்று அதிகாரிகள் வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். இன்னும் சில அதிகாரிகள் ப. சிதம்பரம் வீட்டின் பின் புறமாக உள்ளே சென்று குதித்தனர்.

    இல்லை

    இல்லை

    இத்தனை களேபரமும் நடத்த போது ப . சிதம்பரம் முதல் மாடியில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரின் வீட்டு கேட்டை எகிறி குதித்த அதிகாரிகள் அதன்பின் தரை தளத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    இதையடுத்து போலீசாரை வைத்து காங்கிரஸ் தொண்டர்களை சிபிஐ அகற்றியது. இதையடுத்து சிதம்பரம் வீட்டிற்கு உள்ளே சென்ற அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர். சினிமாவிற்கு நிகராக இந்த மொத்த சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Scenes unfolded like Cinema: What is happening in P Chidambaram house in Delhi?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X